வணக்கம்!
வாராந்தத் தகவல் 10.05.2025 Ukasinfo 19-2025
சித்திரை விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது. கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
கல்வி
பாடசாலை வழமை போல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும். அனைத்துலக ஆண்டிறுதிப்புலன் மொழித் தேர்வு நடைபெறும்.
மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.
ஆண்டிறுதித் தேர்வுகள் 2025 விவரம் :
எழுத்துத் தேர்வுகள்:
அன்னை பூபதி தமிழ்க் கலைகூடத்தின் ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு 24.05.2025 சனி நடைபெறும்.
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஆண்டிறுதித் தேர்வு 07.06.2025 சனி நடைபெறும்.
எதிர்வரும் 07.06.2025 அன்று அனைத்துலக தேர்வு பரீட்சை நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அன்றையதினம் பெந்தெகொஸ்தே விடுமுறை இருப்பதால், எத்தனை மாணவர்கள் பரீட்சை எழுத வருவார்கள் என்பதை வகுப்பாசிரியர்கள் ஊடாக எமக்கு அறியத்தரவும்.
கலைவகுப்புகள்
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
விளையாட்டு போட்டி 2025
விளையாட்டுப்போட்டி - பெற்றோர் கூட்டம்
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம்.
நேரம்: 10.00
இவ்வருட விளையாட்டுப் போட்டியில் உங்கள் பிள்ளைகள் இணைந்து கொள்வதற்கான அங்கத்துவப் பணம் 50 குறோணர்களை TBUK விற்கு விரைவாக செலுத்தி பதிவு செய்து கொள்ளும் வண்ணம் பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.
இதற்கான இணைப்பு கீழே உள்ளது.
TBUK கட்டணவிபரங்கள் - https://medlemskap.nif.no/202173
நிதி 2025
Vår 2025 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no தொலைபேசி 908 89 393
செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
10.05.2025 அனைத்துலக ஆண்டிறுதிப்புலன் மொழித் தேர்வு
24.05.2025 நோர்வேயில் ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு & தமிழின அழிப்பு 16ம் ஆண்டு நினைவு நாள்
07.06.2025 அனைத்துலகத் தமிழ் எழுத்துத்தேர்வு
14.06.2025 கோடைகால ஒன்று கூடல் / பாடசாலை கடைசி நாள்
15.06.2025 விளையாட்டுப் போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_19-2025 pdf