வணக்கம்!
🎓கல்வி – 28.03.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
📢 04.04.2026: தவக்கால விடுமுறை
📌 கற்பகம் (karpagam.no) தொடர்பான தகவல்:
கற்பகம் 4 ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயனர் கணக்கு விவரங்கள் முன்பே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் வெற்றிகரமாக உள்நுழைந்து பயன்படுத்தி வருகிறீர்கள் என நம்புகிறோம். யாருக்கும் உள்நுழைவு சிக்கல் இருந்தாலோ அல்லது கணக்கு விவரங்கள் கிடைக்கவில்லையெனில், வகுப்பு ஆசிரியரை தொடர்பு கொள்ளவும்.
👉தேசிய மட்டத்திலான சிறுவர்கதை/ பேச்சுப்போட்டிகள்
தேசிய மட்டத்தில் நடைபெற்ற சிறுவர் கதைகள் மற்றும் பேச்சுப்போட்டிகளில், எங்கள் வளாகத்து பிள்ளைகள் ஆர்வத்தோடும் தன்னம்பிக்கையோடும் மிகச் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. பங்கேற்ற எங்கள் பிள்ளைகள் அனைவரும் வெற்றியாளர்களே! 🎉
எங்கள் வளாகம் அதிக புள்ளிகள் பெற்றதையும் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். 🏆🏅👏🏼👏🏼
வெற்றி பெற்றவர்கள்:
சிறுவர் நிலை (பெண்):
🥇 அன்வி சுதர்சன்
🥈 அமந்தா தீபன்
1ஆம் வகுப்பு (ஆண்):
🥇 அகரவேலன் இராதாகிருஷ்ணராஜா
2ஆம் வகுப்பு (பெண்):
🥇 அணன்யா மயூரன், சமந்தா இசாபெல்லா தீபன்
🥈 கிசானா ஜெயதாசன்
3ஆம் வகுப்பு (ஆண்):
🥇 ஸ்ரீராம் மணிவண்ணன்
3ஆம் வகுப்பு (பெண்):
🥈 அனிக்கா லாவிந்
🥉 அரியானா சஞ்ஜீவ்
5ஆம் வகுப்பு (பெண்):
🥇 சந்தியா கஜேந்திரன்
🥈 றியானா சுதர்சன்
5ஆம் வகுப்பு (ஆண்):
🥇 பென்ஷ்வா சுதாகரன்
6ஆம் வகுப்பு (பெண்):
🥈 நிர்பயா இராதாகிருஷ்ணராஜா
🥉 தாரா சம்பா ரமேஸ்
7ஆம் வகுப்பு (ஆண்):
🥈 யங்ஸ்ரார் சம்பா ரமாஸ்
🥉 சந்தோஷ் கஜேந்திரன்
🎉 அனைத்து வெற்றியாளர்களுக்கும் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏
உங்கள் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் திறமை எங்களை பெருமைப்படுத்துகிறது. தொடர்ந்தும் சிறந்து விளங்க வாழ்த்துகள்! 🌟
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
🏆விளையாட்டுப் போட்டி 2026
TBUK கட்டணத்தை செலுத்துவதற்கான திகதி 01.04.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 58 மாணவர்கள் மட்டும் TBUK கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துள்ளனர்.
பெற்றோர்களான நீங்கள் இதனை கவனத்தில் கொண்டு, உங்கள் பிள்ளைகளுக்கான பதிவை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பிள்ளைகள் கலந்து கொள்ளுவதற்கான அங்கத்துவக் கட்டணம் (ஒரு பிள்ளைக்கு) 50 kr ஆகும். தயவுசெய்து 01.04.2026க்கு முன் TBUK கட்டணத்தை செலுத்தி, பதிவு செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கான இணைப்பு :– https://medlemskap.nif.no/202173
Min idrett இல் பணம் செலுத்துவதற்கான வழிமுறை
TBUK கட்டணம் செலுத்திய பின், உங்கள் பிள்ளைகளை விளையாட்டுகளுக்கு பதிவு செய்யலாம். அதற்கான பதிவு படிவம் பின்னர் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் விளையாட்டுப் பொறுப்பாளரை தொடர்பு கொள்ளவும். தெ.பே.: 41673165
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
18.04.2026 – Eventyr dagen / சித்திரை விழா
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்