லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 11 – 2026 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 14.03.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

👉தேசிய மட்டத்திலான சிறுவர்கதை/ பேச்சுப்போட்டிகள்

  • நாள்: 21.03.2026
  • நேரம்: 13:30
  • இடம்: தமிழர் வள ஆலோசனை மையத்தின் கட்டிடத்தில்(றொம்மன்)

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

🏆விளையாட்டுப் போட்டி 2026

எங்கள் பாடசாலையில் நடைபெறவுள்ள இவ்வருட விளையாட்டுப் போட்டி 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட விளையாட்டுப் போட்டியில் உங்கள் பிள்ளைகள் கலந்து கொள்ளுவதற்கான அங்கத்துவக் கட்டணம் (ஒரு பிள்ளைக்கு) 50 kr ஆகும். தயவுசெய்து 21.03.2026க்கு முன் TBUK-க்கு கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கான இணைப்பு :– https://medlemskap.nif.no/202173⁠

Min idrett இல் பணம் செலுத்துவதற்கான வழிமுறை

TBUK கட்டணம் செலுத்திய பின் 28.03.2026 இருந்து உங்கள் பிள்ளைகளை விளையாட்டுகளுக்கு பதிவு செய்யலாம். அதற்கான பதிவு படிவம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால் விளையாட்டுப் பொறுப்பாளரை தொடர்பு கொள்ளவும். தெ.பே.: 41673165

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

14.03.2026  - ஆண்டு கூட்டம்

21.03.2026  - தேசிய மட்டத்திலான சிறுவர்கதை / பேச்சுப்போட்டிகள்

18.04.2026 – Eventyr dagen / சித்திரை விழா

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்