வணக்கம்!
🎓கல்வி – 07.03.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉 07.03.2026 - சிறுவர்கதை/ பேச்சுப்போட்டிகள்
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
🏆விளையாட்டுப் போட்டி 2026
எங்கள் பாடசாலையில் நடைபெறவுள்ள இவ்வருட விளையாட்டுப் போட்டி 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட விளையாட்டுப் போட்டியில் உங்கள் பிள்ளைகள் கலந்து கொள்ளுவதற்கான அங்கத்துவக் கட்டணம் (ஒரு பிள்ளைக்கு) 50 kr ஆகும். தயவுசெய்து 21.03.2026க்கு முன் TBUK-க்கு கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கான இணைப்பு :– https://medlemskap.nif.no/202173
Min idrett இல் பணம் செலுத்துவதற்கான வழிமுறை
TBUK கட்டணம் செலுத்திய பின் 28.03.2026 இருந்து உங்கள் பிள்ளைகளை விளையாட்டுகளுக்கு பதிவு செய்யலாம். அதற்கான பதிவு படிவம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் விளையாட்டுப் பொறுப்பாளரை தொடர்பு கொள்ளவும். தெ.பே.: 41673165
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
14.03.2026 ஆண்டு கூட்டம்
2025 ஆம் ஆண்டிற்கான கணக்குப் பதிவுகள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்திற்கு வந்து அவற்றைப் பார்வையிடலாம்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்☕
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்