லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 09 – 2025 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 01.03.2025 Ukasinfo 09-2025

கல்வி
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.

சனிக்கிழமை 01.03.25 அன்று திருக்குறள் போட்டி எங்கள் வளாகத்தில் நடைபெறும். 4ம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடசாலையின் மேல் கட்டிடத்தில் உள்ள கீழ் மண்டபத்தில் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பும் தனித்தனியாக நடைபெறும். பெற்றோர்களும் உள்வாங்கப்படுவார்கள். மாணவர்கள் திருக்குறள் சொல்லி முடிந்த பின்னர் எல்லா மாணவர்களுக்கும் ஒரு சிறிய பரிசு கொடுக்கப்படும். மாணவர்களுக்கு 1ம், 2ம், 3ம் பரிசு பெற்றவர்கள் யார் என்று அறிவிக்கப்படும். அம் மூவரும் அன்னை பூபதி அன்னைத் தமிழ் முற்ற இறுதிப் போட்டியில் பங்கு கொள்வார்கள்.

குறிப்பு: திருக்குறள் போட்டிகள் பாடசாலை நேரத்தில் முடிவு பெறவில்லை என்றாலும் பாடசாலை முடிந்த பின்னரும் தொடரும்.

08.03.2025 பேச்சு தெரிவு போட்டி

கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

பாஸ்கரன் ஆசிரியரின் நாட்டுப்புற கலை வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தக் கலை வகுப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு அமைய முதலாம் வகுப்பு மாணவர்கள் உட்பட அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் உள்வாங்கப்படுவர். இதற்காக முன்பதிவு படிவம் ஊடாக மாணவர்களை பதிவு செய்து உள்வாங்கப்படும். நாட்டுப்புற கலை வகுப்புக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.

பங்கு கொள்ள இருக்கும் மாணவர்கள் உங்கள் பதிவினை இதில் பதிவு செய்யவும்.
https://forms.office.com/e/08Ku6Ykz3K

நிதி 2024

Høst 2024 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no தொலைபேசி 908 89 393

செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.

ஆண்டுக்கூட்டம் 15.03.2025
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம். நேரம்: 09:45-12:00 (இ.வே.10:45-11:15)

குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே!
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
01.03.2025 திருக்குறள் தெரிவு போட்டி
08.03.2025 பேச்சு தெரிவு போட்டி
15.03.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறன்ஸ்கூக் வளாகம்
15.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் பேசுப்போட்டிகள்
29.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் கதை மற்றும் திருக்குறள் போட்டிகள்

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்