லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 07 – 2026 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 14.02.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

 

👩🏻‍🏫  வளர்பிறை கல்வி: 1ஆம் ஆண்டு தொடக்கம் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கற்கை நெறி நடைபெற்று கொண்டு வருகிறது.

🎤 அறிவுமுற்றப் போட்டி நிலாமுற்றம் நிகழ்வு தொடர்பான அறிவிப்பு

அறிவுமுற்றப் போட்டி நிகழ்வின் ஒரு பகுதியாக நிலாமுற்றம் போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.

நிலாமுற்றம் போட்டி விவரம்:

  • 4, 5 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறும்.
  • கடந்த சனிக்கிழமை அந்தந்த வகுப்பு பெற்றோர்களுக்கு, வகுப்பில் பொதுவான போட்டி விதிமுறைகள் மற்றும் சுற்றுகள் குறித்து விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.
  • 14.02.2026 அன்று நடைபெறும் வகுப்பு நிகழ்வில் கல்வியுடன் தொடர்புடைய போட்டி நடத்தப்படும்.
  • அந்தப் போட்டியில் முதல் 4 நிலைகளை பெறும் மாணவர்கள், நிலாமுற்றம் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.

நிலாமுற்றம் போட்டி தொடர்பான விதிமுறைகள் மற்றும் மேலதிக தகவல்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. -  விதிமுறைகள் 

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

14.03.2026  ஆண்டு கூட்டம்

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்