வணக்கம்!
வாராந்தத் தகவல் 15.02.2025 Ukasinfo 07-2025
விளையாட்டுப்போட்டிக்கூட்டம் 15.02.2025 சனிக்கிழமை
- இல்லப் பொறுப்பாளர்கள் தெரிவு மற்றும் புதிய வளாகம் திறப்பது தொடர்பாக லோரன்ஸ்கூக் நிருவாகமும் பெற்றோரும் இணைந்து எடுத்த தீர்மானம் எழுத்து வடிவில் அன்னை தலைமைக்கு அனுப்புவதற்கு முன்னர் பெற்றோரின் பார்வைக்கு முன்வைக்கப்படும்.
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம். நேரம்: 09:45-11:45 (இ.வே.10:45-11:15)
கல்வி
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் எதிர் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற மாட்டாது.
அன்னை முற்றப் போட்டிகளான கதை சொல்லும் போட்டி, திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி களில் பங்கு கொள்ள இருக்கும் மாணவர்கள் உங்கள் பதிவினை இதில் பதிவு செய்யவும்.
https://forms.office.com/e/wQZuTu1tYW
பதிவு செய்த மாணவர்களுக்கு அன்னை முற்றப் போட்டிகளுக்கான பயிற்சிகள் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 18.00 – 19:00 வரை நடைபெறும்.
01.03.2025 திருக்குறள் தெரிவு போட்டி
08.03.2025 பேச்சுப் தெரிவு போட்டி
கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
பாஸ்கரன் ஆசிரியரின் நாட்டுப்புற கலை வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தக் கலை வகுப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு அமைய முதலாம் வகுப்பு மாணவர்கள் உட்பட அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் உள்வாங்கப்படுவர். இதற்காக முன்பதிவு படிவம் ஊடாக மாணவர்களை பதிவு செய்து உள்வாங்கப்படும். நாட்டுப்புற கலை வகுப்புக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.
பங்கு கொள்ள இருக்கும் மாணவர்கள் உங்கள் பதிவினை இதில் பதிவு செய்யவும்.
https://forms.office.com/e/08Ku6Ykz3K
நிதி 2024
Høst 2024 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no தொலைபேசி 908 89 393
செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
ஆண்டுக்கூட்டம் 15.03.2025
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம். நேரம்: 09:45-12:00 (இ.வே.10:45-11:15)
குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே!
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
01.03.2025 திருக்குறள் தெரிவு போட்டி
08.03.2025 பேச்சுப் தெரிவு போட்டி
15.03.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறன்ஸ்கூக் வளாகம்
15.& 16.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_07-2025 pdf