லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 06 – 2026 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் - வாரந்தரதகவல்

🎓கல்வி – 07.02.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

👉 சிறுவர் கதை/ பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பபடிவம் -  Microsoft Forms Link

🗣️ சிறுவர் கதை சொல்லும் போட்டி  -  2020 ஆம் ஆண்டு பிறந்த பிள்ளைகளுக்காக

🎤 பேச்சுப் போட்டி -  2013 – 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிறந்த மாணவர்களுக்காக

ஏதாவது ஐயப்பாடு இருப்பின் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ளவும்

👩🏻‍🏫 வளர்பிறை கல்வி: 1ஆம் ஆண்டு தொடக்கம் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கற்கை நெறி 07.02.2026 ஆரம்பமாகிறது.

🎶கலைவகுப்புகள்

வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.

📢 அறிவுமுற்றப் போட்டி

இவ்வாண்டு (2026) மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் திருநாள் விழாவின் போது, நேரம் போதாமையினால் நடைபெறாமல் விடுபட்ட அறிவுமுற்றப் போட்டியை 28.02.2026 அன்று நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, அறிவுமுற்றப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் தயார்நிலையில் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

📅  நாள்: 28.02.2026
⏰ நேரம்: பிற்பகல் 16:00 – 20:00
📍 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

14.03.2026  ஆண்டு கூட்டம்

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

 

🍵 தேநீர்ச்சாலை வழமையான நேரத்தில் வழமைபோல் இயங்கு நிலையில் இருக்கும்

 

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்