வணக்கம்!
🎓கல்வி – 24.01.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉 சிறுவர் கதை/ பேச்சுப்போட்டிகளில் பங்குபெறும் பிள்ளைகளை ஆசிரியர்களிற்கு அறியப்படுத்தவும். விண்ணப்பபடிவம் விரைவில் அனுப்பிவைக்கப்படும்
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
பொங்கல் விழா மீளாய்வுச் சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது. விழா தொடர்பான உங்கள் கருத்து / பாராட்டு / பரிந்துரைகளை **சனிக்கிழமை இரவு (24-01-2026)**க்குள் lorenskog@annai.no என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
📢 பெற்றோருக்கான தகவல்
பெற்றோர்களுக்கான பட்டறைகள்
இப்பட்டறையின் முதன்மை நோக்கம்: ஆரம்ப வகுப்பு மாணவர்களிடம் தமிழ் மொழியை இலகுவாக ஈர்க்கக்கூடிய முறையிலும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் எடுத்துச் செல்லும் புதுமையான கற்பித்தல் வழிமுறைகளை பெற்றோருடன் பகிர்வதாகும்.
🗓️ நாள்: 24.01.2026
⏰ நேரம்: காலை 9:45 – 10:45
📚 நிலை: சிறுவர் நிலை – 5ம் வகுப்பு
👩🏫 நடத்துபவர்: லோறன்ஸ்கூக் வளாக ஆசிரியர், கௌரிசிறி ஆறுமுகதாஸ் அவர்கள்
💻 அன்னை தலைமை நிர்வாகத்தால் நடத்தப்படும் இணையவழி கல்வித்திட்டம் & கற்பித்தல் வழிமுறைகள் பட்டறை
🗓️ நாள்: 24.01.2026
⏰ நேரம்: காலை 11:15 – 12:00
📍 இடம்: லோறன்ஸ்கூக் வளாகம் – மேல்மாடி கட்டிடம்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
24.01.2026 பெற்றோர்களுக்கான பட்டறைகள்
31.01.2026 பெற்றோர் தகவல் கூட்டம்
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்