வணக்கம்!
❤️ எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️
🎓கல்வி – 03.01.2026 சனிக்கிழமை – 09:30 -12:30 (10:45 – 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
👉தேசிய மட்டத்திலான மாவீரர் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள். இவர்களுக்கான பரிசில்கள் 17.01.2026 தமிழர் திருநாள் (பொங்கல்) விழாவில் வழங்கி மதிப்பளிக்கப்படும் என்பதனை மகிழ்வோடு அறியத்தருகின்றோம் . வெற்றியாளர் பட்டியலை இங்கே காணலாம்.
👉 2026 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள சிறுவர் கதைசொல்லல் மற்றும் பேச்சுப் போட்டிகள் பற்றிய தகவல்:
போட்டிகள் முதலில் பள்ளி (வளாக) மட்டத்தில் நடைபெறும். அங்கு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களே தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
🎶கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
| நிர்வாக உறுப்பினர் தெரிவு 2026–2028 |
லோரன்ஸ்கூக் வளாகத்தில் அடுத்த ஆண்டுக்கான நிர்வாகத்தில் இணைய விரும்பும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். இணைய விரும்புவர்களின் பணிக்காலம் குறைந்தது 2026–2028 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப முடிவுத்திகதி: 10.01.2026.
👉 மேலும் தகவல்களுக்கு, இங்கே காணலாம்.
🧉🌞🌾 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா – 2026 🌾🧉🌞
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அனைத்து வளாகங்களும் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா 17.01.2026 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. வழமைபோல் இவ்வருடமும், அனைத்து வளாகங்களும் இணைந்து பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் பின்வருமாறு:
✨ பொங்கல் விழாவிற்கான பொது நிகழ்வுகள் ✨
இதுவரை நடைபெற்ற பயிற்சிகளில் எண்ணிக்கை அளவில் குறைந்த மாணவர்களே பங்கேற்றுள்ளனர். மாணவர்களை அதிக அளவில் சேர்க்க உதவிபுரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள்,
அன்னை கலைக்குழுவுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
☎️ தொடர்புகளுக்கு : அன்னை கலைக்குழு –📞 வள்ளுவன் +47 98850819, லோறன்ஸ்கூக் 📞 ரூபன் : +47 92150150
அறிவு முற்றுப் போட்டி
தமிழர் திருநாளில் அறிவு முற்றுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம் பெறுவதை நீங்கள் அறிவீர்கள், அப்போட்டியில் கலந்துகொள்ளும் பிள்ளைகளை சனிக்கிழமை 10.01.2026 இடைவெளியின் பின் போட்டி வைத்து எடுப்பதாக உள்ளோம்.
போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெறும்:
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 4 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.கூடுதலாக 1 மாற்று மாணவர் (Reserve) தெரிவு செய்யப்படுவார்.
💵 நிதி 2025
Høst 2025 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளுங்கள்: மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no தொலைபேசி 908 89 393. செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்