தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் – 2026

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்”💐

14.01.2026

பொங்கிடும் இனிய தாய்த்தமிழ், வந்துதிக்கும் தைத் திருநாளாம் தைப்பொங்கல் தமிழரின் மரபையும் பண்பையும், உழைப்பின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தும் இனிய பெருநாள்.

தமிழ் தந்த அமிழ்தம் சுவைத்து, தமிழ் மரபோடு வாழ்ந்து, தமிழருக்கே உரிய தமிழ்த் திருநாளாம் தைப்பொங்கலில் நலம் பெற்று, வளம் பெற்று, வாழ்வு பலம் பெற்று, புலன் சுகம் பெற்று, இன்பம் பெருக வாழ்க… வாழ்க என வாழ்த்துகின்றோம்.

பொங்கிடும் பொங்கலோடு உங்கள் வாழ்வும் மேலான நலமோடு பொங்கி,
ஒளிர்ந்து மிளிர்ந்து, மகிழ்ச்சியும் உளநிறைவும் நிறைந்ததாக என்றென்றும் திகழ வேண்டுமென உளமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வினிய தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தமது வளாக நிருவாகங்கள், ஆசிரியப் பெருந்தகைகள், அன்புச் மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து நலன்விரும்பிகளுக்கும்

உளமகிழ்ந்த உலகத் தமிழ்ப் பெருநாளாம், தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
பொங்குக பொங்கல்!

அன்புடன் வாழ்த்தும்💐
தலைமை நிருவாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்