வணக்கம்!
வாராந்தத் தகவல் 07.12.2024 Ukasinfo 49-2024
நத்தார் விழாவை முன்னிட்டு 07.12.2024 கல்வி மற்றும் கலை வகுப்புகள் நடைபெறமாட்டாது.
எதிர்வரும் 07.12.2024 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென் மண்டபத்தில் அன்னை லோறன்ஸ்கூக் வளாகத்தின் நத்தார் விழா அதற்கான அழைப்பையும் சென்ற வாரந்த தகவலில் தந்துள்ளோம்.
தேசிய ரீதியில் அறிவால் போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களையும், மாவீரர் நாள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் மற்றும் கோடை கால விடுமுறைக்கு சென்று தாங்கள் கண்ட காட்சிகளை தழிழில் கதைத்து ஒலிப்திபவு செய்து எமக்கு அனுப்பிய மாணவ செல்வங்களுக்கு சிறு பரிசுப் பொருள் கொடுத்து கௌரவித்தலும்,
10 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நத்தார் விழாவில் வழங்கப்படும்.
சான்றிதழ்கள் பெறும் மாணவர்கள் கலாச்சார உடையணிந்து வரவேண்டுகின்றோம்.
அன்பான பெற்றோர்களே!
விழாவுக்கு முன்னும்,பின்னும் நிறைய வேலைகள் உள்ளன. அத்தேவைகளை உணர்ந்து பெற்றோர்குழு, தேநீர்ச்சாலை குழுவினரோடு இணைந்து ஒற்றுமையோடு செயற்பட வேண்டி நிற்கின்றோம்.
நத்தார் விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
கல்வி
14.12.2024 அரையாண்டுத் தேர்வு
21.12.2024 தவணை இறுதி நாள் , தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும்
வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் மேலதிக கற்கைநெறி வகுப்புகள் இவ்வாரம் முதல் 2024 ஆண்டு முடியும் வரை நடைபெற மாட்டாது. மீண்டும் 2025 தை மாதத்தில் இருந்து மேலதிக கற்க நெறி வகுப்புகள் தொடரும்.
நிதி 2024
Høst 2024 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால்,
எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no
தொலைபேசி 908 89 393
2024 ஆவணி மாதம் அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்ட அங்கத்துவபணம் பலர் செலுத்தவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது, செலுத்தாத அனைவருக்கும் KID மற்றும் கணக்கு எண் விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் விரைவில் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
18.01.2025 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
18.01.25 அன்னை வளாகங்கள் ஒன்று சேர்ந்து நடாத்தும் தமிழர் தைப்பொங்கல் விழாவிற்கு எங்கள் வளாகத்திற்கு நாடகம் கிடைத்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் கதைக்குப் பொருத்தமாக அமையும் வகையில் பெரிய கதாபாத்திரங்களுக்கு 10ம், 9ம், 8ம் வகுப்பு மாணவர்களையும் மற்றும் நாடகத்தில் வரும் சிறிய பிள்ளைகள் பாத்திரத்திற்கு 5ம் வகுப்பு மாணவர்களையும் உள்வாங்க உள்ளோம்.
நாடகத்தில் பங்கு கொள்ள விரும்பும் பிள்ளைகளின் பெயர் விபரங்களை உங்கள் வகுப்பு ஆசிரியருக்கு 12.12.24 வியாழக்கிழமைக்கு முன்பு கொடுக்கவும். 14.12.24 அன்று அரையாண்டு பரீட்சை முடிந்தபின் நாடகத்திற்கான கதாபாத்திர தேர்வுகள் பாடசாலையில் நடைபெறும்.
முக்கிய குறிப்பு:
நாடகத்தில் நடிக்க முன்வரும் மாணவர்கள், அவர்கள் ஏற்று நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள் புலன் மொழித்திறன் அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்.
அதாவது பிள்ளைகள் தமிழில் சரளமாகக் கதைக்கக் கூடியவராகவும், தமிழை நன்றாக வாசிக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
நாடகம் பழக்கும் போது ஒரு பிள்ளை தொடர்ந்து இரண்டு தடவைகள் பயிற்சிக்கு வரவில்லை என்றால் அந்தப் பிள்ளை தொடர்ந்து அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தை இழந்து விடுவார்.
கூடிய பிள்ளைகள் விரும்பி நாடகத்தில் பங்குகொள்ள பெற்றோர்களாகிய நீங்களும் ஊக்கம் கொடுக்க வேண்டும்.
எமது வளாகம் ஒரு சிறந்த, தரமான நாடகத்தை வழங்க பெற்றோர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனைத் தருவீர்கள் என்று நம்புகிறோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
18.01.2025 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
15.02.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறஸ்கூக் வளாகம்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்