வணக்கம்!
வாராந்தத் தகவல் 23.11.2024 Ukasinfo 47-2024
அன்னை லோறன்ஸ்கூக் வளாகப் பெற்றோருக்கான தகவல் கூட்டம்.
காலம்: 23.11.2024 சனிக்கிழமை.
நேரம்: 09.45 மணி.
லோறன்ஸ்கூக் வளாக எதிர்கால நலன் சார்ந்த ஒரு கலந்துரையாடலை அன்னை தலைமை இணைப்பாளரோடு இணைந்து நடத்த உள்ளோம்.
அத்தோடு எமது வளாகத்தின் எதிர்கால நிகழ்வுகள் சார்ந்த தகவல்களும் பரிமாறப்படும்.
இச்சந்திப்பின் இறுதியில் நோர்வேயில் இந்து சமய முறைப்படி மரணச்சடங்குகள் செய்து வரும் திரு தேவன் அவர்கள் பெற்றோருடன் ஒரு கலந்துரையாடல் நடாத்த அனுமதி கேட்டுள்ளார். அன்னை தலைமையின் அனுமதியோடு அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க தீர்மானித்துள்ளோம்.
கல்வி, சனிக்கிழமை கற்பித்தல் நேரம் 09.30-12.30
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
வெள்ளிக்கிழமைகளில் மேலதிக கற்கைநெறி உதவி தேவைப்படும் பிள்ளைகளின் பெற்றோர்கள் நேரடியாக உங்கள் பிள்ளைகளின் வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்கவும்.
மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்பு 1-3 வரை வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும், வகுப்பு 4-10 வரை வெள்ளிகிழமைகளில் 18:30 – 20:30 மணி வரை நடைபெறும்.
நத்தார் விழா எதிர்வரும் 07.12.2024 சனிக்கிழமை சென் மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் ஊடாக வகுப்பு ரீதியாக பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. உங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து நத்தார் விழாவை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
நிதி 2024
2024 ஆவணி மாதம் அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்ட அங்கத்துவபணம் பலர் செலுத்தவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது, செலுத்தாதவர்கள் விரைவில் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுவரை அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும். Høst 2024 கட்டணங்கள் எதிர்வரும் நாட்களில் அனுப்பப்படும்.
நிர்வாக உறுப்பினர் தெரிவு 2025-2027
லோறன்ஸ்கூக் வளாகத்தில் அடுத்த ஆண்டு நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற புதிய 4 நிர்வாக உறுப்பினர்கள் தேவைப்படுகின்றார்கள். இணைய விரும்புவர்களின் பணிக்காலம் குறைந்தது 2025-2027 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப முடிவுத்திகதி: 23.11.2024.
உள்வாங்கபடவுள்ள நிர்வாக பொறுப்புகள் 2025-2027
• உதவி நிர்வாக பொறுப்பாளர்
• கல்விப்பொறுப்பாளர்
• அலுவலகப்பொறுப்பாளர்
• விளையாட்டுப்பொறுப்பாளர்
நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் தெரிவுக்குழு உறுப்பினர்களான
• பாணுசல்யா பெனான்டோ banusalya@yahoo.no 419 31 302
• கிருபா சதீஸ் kiruba21@hotmail.com 486 05 120
• சத்தியா இராஜேந்திரம் sathy@hotmail.no 917 18 206
இவர்களுடன் தொடர்புகொள்ளவும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
07.12.2024 நத்தார் விழா (Kjenn Samfunnshus)
18.01.2025 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
15.02.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறஸ்கூக் வளாகம்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்