லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 45 – 2024 -ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 09.11.2024 Ukasinfo 45-2024

கல்வி, சனிக்கிழமை கற்பித்தல் நேரம் 09.30-12.30
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

வகுப்புப் பிரதிநிதிகள் தெரிவுக்காக வகுப்பாசிரியர்கள் வைபர் குழுமங்கள் ஊடாக அனுப்பி உள்ள தகவலை கருத்தில் கொண்டு பிரதிநிதிகள் தெரிவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம். சென்ற வாரம் ஒத்துழைப்பு வழங்கிய வகுப்புகளுக்கு நன்றி இந்த வாரம். 11:30 மணிக்கு பெற்றோர் குழு தெரிவு இடம்பெறும்.

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டிகள் 12:00 மணிக்கு ஆரம்பமாகும்.

வளர்பிறை வகுப்பு 15.11.24 வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறோம். மேலதிக உதவி தேவைப்படும் மாணவர்களுக்காக தொடங்குகிறோம். உங்கள் பிள்ளைகளுக்கு தேவை இருப்பின் வகுப்பு ஆசிரியருக்கு தகவல் கொடுக்கவும்.

கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
கலை வகுப்புகளில் ஒன்றான பாஸ்கரன் மாஸ்டரின் நடன வகுப்பு 02.11.2024 முதல் ஆரம்பமாகும். விரும்பியவர்கள் நிர்வாகத்தில் தங்கள் பிள்ளைகளை பதிவு செய்துவிட்டு நடன வகுப்புப்பை ஆரம்பிக்கலாம். அரையாண்டு தவணைக் கட்டணம் kr 300,- (link)
நடப்பில் இருக்கும் அரையாண்டுக்குரிய கட்டணம் kr 200,-

இவ்வாண்டு எமது தேசியத்தலைவரின் 70வது அகவை நாளையொட்டி மாணவர்களிடம் இருந்து கவிதைகள் பாடல்கள் போன்ற நிகழ்வுகளை கார்த்திகை 26ம் திகதி ttn தொலைக்காட்சிக்கான நிகழ்வாக எதிர்பார்கிறார்கள். அத்துடன் மாவீரர்களிற்கான நிகழ்விற்கும் கவிதை ,பாடல்களையும் விரும்பியவர்கள் செய்யலாம். ஒலிப்பதிவுகள் கார்த்திகை மாத ஆரம்ப கிழமைகளில் நடைபெறவுள்ளன. எனவே நிகழ்வுகளை செய்ய விரும்பும் மாணவர்கள் அன்னைகலைப் பொறுப்பாளர் 98850819 தொடர்பு கொள்ளலாம்.

நிதி 2024
2024 ஆவணி மாதம் அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்ட அங்கத்துவபணம் பலர் செலுத்தவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது, செலுத்தாதவர்கள் விரைவில் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும். Høst 2024 கட்டணங்கள் எதிர்வரும் நாட்களில் அனுப்பப்படும்.

விளையாட்டு போட்டி 2024
விளையாட்டு போட்டி 2024 குழுவுடனான மதிப்பீட்டுக் கூட்டத்தின் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.Møtereferat sportskomiteen__2024

நிர்வாக உறுப்பினர் தெரிவு 2025-2027
லோறன்ஸ்கூக் வளாகத்தில் அடுத்த ஆண்டு நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற புதிய 4 நிர்வாக உறுப்பினர்கள் தேவைப்படுகின்றார்கள். இணைய விரும்புவர்களின் பணிக்காலம் குறைந்தது 2025-2027 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப முடிவுத்திகதி: 23.11.2024.
உள்வாங்கபடவுள்ள நிர்வாக பொறுப்புகள் 2025-2027
• உதவி நிர்வாக பொறுப்பாளர்
• கல்விப்பொறுப்பாளர்
• அலுவலகப்பொறுப்பாளர்
• விளையாட்டுப்பொறுப்பாளர்
நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் தெரிவுக்குழு உறுப்பினர்களான
• பாணுசல்யா பெனான்டோ banusalya@yahoo.no 41931302
• கிருபா சதீஸ் kiruba21@hotmail.com 48605120
• சத்தியா இராஜேந்திரம் sathy@hotmail.no 91718206
இவர்களுடன் தொடர்புகொள்ளவும்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
09.11.2024 மாவீரர் ஓவியப்போட்டி
07.12.2024 நத்தார் விழா (Kjenn Samfunnshus)
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_45-2024 (pdf)