வணக்கம்!
வாராந்தத் தகவல் 07.09.2024 Ukasinfo 36-2024
கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
2024-2025 கல்வியாண்டுத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
புதிதாக இணையவிருக்கும் மாணவர்களை இணைப்பதற்கான படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அப்படிவங்களை நிரப்பி அலுவலகப் பொறுப்பாளரிடம் வழங்கிய பின்பு தான் அவர்கள் வகுப்பறைகளில் இணைக்கப்படுவர்.
வகுப்பறைச் சந்திப்புகளுக்கான நேரவிபரம்.
இந்த வாரம் முதல் 28.09.2024 வரை அனைத்து வகுப்புகளுக்குமான வகுப்பறை சந்திப்பு மட்டும் இடம்பெறும். அந்தந்த வகுப்புக்குரிய பெற்றோர்கள் அவசியம் வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
கலைவகுப்புகள் - சனிக்கிழமை
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற பெற்றோர் தகவல் சந்திப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக நிகழ்வுகள் நோக்கிய கலைப் பாடங்கள் valfag இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த கலைப் பொறுப்பாளர் திரு துராதரன் அவர்கள் ஒரு கலைக்குழுவை உருவாக்க வேண்டும் என்பதை கூறியிருந்தார்.
அதற்கு அமைவாக ஆர்வமுள்ள விரும்பிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலை ஆர்வம் உள்ள கலைஞர்கள் உள்ளடங்கலாக கலைக்குழு அமைய உள்ளது. இது தொடர்பாக ஆர்வமுள்ளவர்கள் கலைப் பொறுப்பாளரோடு தொடர்பு கொள்ளவும்.
நிதி 2024
2024 ஆவணி மாதம் அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்ட அங்கத்துவபணம் பலர் செலுத்தவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது, செலுத்தாதவர்கள் விரைவில் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
21.09.2024 அறிவாடல் தெரிவு போட்டி
19.10.2024 நவராத்திரி விழா
20.10.2024 அறிவாடல் இறுதிப் போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_36-2024 (pdf)