லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 18 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 04.05.2024 Ukasinfo 18-2024

வணக்கம்!

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை

சங்கீதம்
மழலைகள் சிறுவர் வகுப்பு 12:00 - 12:30
புதிதாக ஆரம்பித்த 1 ஆம் வகுப்பில் இருந்து இணைந்த மாணவர்களுக்கு 12:30 - 13:30
ஏற்கனவே சங்கீதத்தில் நல்ல பயிற்சி பெற்ற 2. Grade மாணவர்களுக்கும் தனியாக வகுப்பு எடுக்கப் படும்.

Freestyle கலை வகுப்பு 12:30 - 13:30
1 ஆம் வகுப்பில் இருந்து free style நடனம் ஆட இணையலாம்.
பல மாணவர்கள் விரும்பி இணைந்தால், வகுப்பு மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து, சிறியவர் பெரியவர் என வகுப்புக்களை அமைக்கலாம்.

பரத நாட்டிய வகுப்பு
1 ஆம் வகுப்பில் இருந்து புதிதாக இணைந்த மாணவர்களுக்கு 12:30 - 13:15 இலவசமாக நடனம் கற்றுக் கொடுக்கப் படும்.
ஏற்கனவே பரதம் பயிலும் 2. grade மாணவர்களுக்கு 13:15 - 14:00 ஆரம்பமாகும்.

கலை வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோருக்கான தகவல்.
அந்த வகையில் புதிய மாணவர்கள் தொடர்வதாயின் இங்கே குறிப்பிடும் #825028 VIPPS இலக்கத்திற்கு 200 குறோணர்கள் ஒரு கலை வகுப்புக்கு செலுத்த வேண்டும். குடும்ப இலக்கம், பிள்ளையின் பெயர், வகுப்பையும் பதிவிடவும். அப்படி செலுத்தியவர்கள் மட்டுமே இந்த வாரத்தில் இருந்து கலை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவர்.
இந்த 200 குறோனர்களுக்கான விளக்கம் பின்வருமாறு. விரும்பி பதிவு செய்யும் புதிய மாணவர்களுக்கு மேலும் ஒரு சலுகையாக கோடை கால விடுமுறை வரைக்கும் இந்த 200 குறோணர்கள் மட்டும் அறவிடப்படும்.

விளையாட்டுப்போட்டி 2024
சென்றவாரம் இல்லங்கள் தங்கள் விளையாட்டு போட்டிக்கான திட்டங்களை ஆரம்பித்தன, அந்த வகையில் இந்த வாரம் மஞ்சள் இல்லத்திற்கு இடைவேளைக்கு முன்பும் மணி 09:45 – 10.30 சிகப்பு இல்லத்திற்கு பின்பும் மணி 11:30 – 12:15 Samlingsal ஒதுக்கப்பட்டுள்ளது.

எமது வளாகத்தில் 10ஆம் வகுப்பில் கல்விபயிலும் மாணவர்களான
லுஷானா சுரேஷ்,
பிரியங்கா சைந்தவி கிருஷ்ணகுமார்,
மானுசன் சிறிநேசன்,
திவ்யேஷ் தயானந்தன்,
ஆகியோர் விளையாடடுப்போட்டிகளை நடாத்துவதற்கு சுயவிருப்பத்துடனும் பெற்றோரின் ஒப்புதலுடனும் முன்வந்துள்ளமை அனைவருக்கும் பெருமையோடு அறியத்தருகின்றோம். இவ்வாரம் இவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் விளையாடுகள் பற்றிய விளக்கமளித்தல் வகுப்பறையில் சந்திப்பினை நடாத்துவார்கள்.

விளையாட்டு போட்டி பயிற்சிகள்:
செவ்வாய்க்கிழமைகள் 18:00-19:30 Lillestrøm (Leiraveien 2, 2000 Lillestrøm)
ஞாயிற்றுக்கிழமைகள் 16:00-17:30 på Stovner (Smiuvegen 253, 0981 Oslo)

நிதி 2024
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும்.
முழுமை பெற்ற அங்கத்தவர் உரிமை பெறுவதற்கு HØST 2023 வரையான தவணைக் கட்டணங்களை செலுத்தியவர்களாக இருத்தல் வேண்டும்.

புதிதாக இணைந்து இன்றுவரை விலைப்பட்டியல் கிடைக்காதவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் ஆவர்.
முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் Viber குழுமங்களில் அனுப்பப்படும்.
இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
18.05.2024 தமிழின அழிப்பு 15ம் ஆண்டு நினைவு நாள்.
09.06.2024 விளையாட்டுப்போட்டி.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_18-2024 (pdf)