லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 17 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 27.04.2024 Ukasinfo 17-2024

வணக்கம்!

சென்ற வாரம் அன்னை பூபதி நினைவு நாள் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
சங்கீதம்
மழலையர் - சிறுவர் வகுப்பு மாணவர்களுக்கு 12:00 - 12:45
1 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12:45 - 13:30

Freestyle
1 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12:30 - 13:30

பரத நாட்டியம்
கோடை விடுமுறை வாரம் வரை புதிதாக பரதம் பயில இணையும் மாணவர்களுக்கு இலவசமாக 12:30 - 13:30
ஏற்கனவே பரதம் பயிலும் 2. Grade மாணவர்களுக்கு 13:30 - 14:15

விளையாட்டுப்போட்டி 2024
இல்லங்கள் இந்த வாரத்தில் இருந்து தங்கள் விளையாட்டு போட்டிக்கான திட்டங்களை ஆரம்பிக்கலாம், அந்த வகையில் சிகப்பு இல்லத்திற்கு இடைவேளைக்கு முன்பும் மணி 09:45 – 10.30 மஞ்சள் இல்லத்திற்கு பின்பும் மணி 11:30 – 12:15 Samlingsal ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டி பயிற்சிகள்:
30.04.2024 மணி 18:00 – 19:30 வரை Lillestrøm stadion ல் நடைபெறும்.

நிதி 2024
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும். முழுமை பெற்ற அங்கத்தவர் உரிமை பெறுவதற்கு HØST 2023 வரையான தவணைக் கட்டணங்களை செலுத்தியவர்களாக இருத்தல் வேண்டும்.

புதிதாக இணைந்து இன்றுவரை விலைப்பட்டியல் கிடைக்காதவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் ஆவர்.

முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் Viber குழுமங்களில் அனுப்பப்படும்.

இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
09.06.2024 விளையாட்டுப்போட்டி.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_17-2024 (PDF)