லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 16 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 20.04.2024 Ukasinfo 16-2024

வணக்கம்!

சித்திரை விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது. கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை - நாடளாவிய அன்னை தமிழ்முற்றக் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் இடம்பெற்றது. பங்குகொண்டு சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி பெற்ற எமது வளாகத்தைச் சேர்ந்த மாணவர்களின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
எல்லா மாணவர்களும் மேல் கட்டிடத்திற்கு 09.20 மணிக்கு வரவும் பாடசாலை மேல் கட்டிடத்தில் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வு நடைபெறும்.
-அகவணக்கம்
-பாடசாலை கீதம்
-அன்னை பூபதி பற்றி பேசு மற்றும் கவிதை.
அதனைத் தொடர்ந்து வழமையான கல்வி நடைபெறும்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.

சித்திரை விழாவிலே உங்கள் பிள்ளைகள் தரமான அழகான நிகழ்வை தந்தார்கள். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
கலை வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோருக்கான தகவல்.

மதிப்புக்குரிய பெற்றோர்களே!
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் சித்திரை விழா நிறைவு பெற்று அடுத்து வரும் வாரமே கலை வகுப்புக்களாகிய பரதநாட்டியம், சங்கீதம், Freestyle நடனம் ஆகிய வகுப்புகளை தொடர விரும்பும் புதிய மாணவர்களை பதிவு செய்வோம் என அறிவித்திருந்தோம்.
அந்த வகையில் புதிய மாணவர்கள் தொடர்வதாயின் இங்கே குறிப்பிடும் #825028 VIPPS இலக்கத்திற்கு 200 குறோணர்கள் ஒரு கலை வகுப்புக்கு செலுத்த வேண்டும். குடும்ப இலக்கம், பிள்ளையின் பெயர், வகுப்பையும் பதிவிடவும். அப்படி செலுத்தியவர்கள் மட்டுமே இந்த வாரத்தில் இருந்து கலை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

இந்த 200 குறோனர்களுக்கான விளக்கம் பின்வருமாறு.
விரும்பி பதிவு செய்யும் புதிய மாணவர்களுக்கு மேலும் ஒரு சலுகையாக கோடை கால விடுமுறை வரைக்கும் இந்த 200 குறோணர்கள் மட்டும் அறவிடப்படும்.

விடுமுறை முடிந்து மீண்டும் பாடசாலை ஆரம்பித்தபின் அனைத்து கலை வகுப்பு மாணவர்களிடம் இருந்து 800 குறோணர்களுக்கு பதிலாக 600 குறோணர்களே அறவிடப்படும். என்ற தகவலையும் மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம். இந்த அரிய வாய்ப்போடும் புதிய மாற்றத்தோடும் பிள்ளைகளை பயனடையச் செய்வோம்.

நேர அட்டவணை:
சங்கீதம்
மழலையர் – சிறுவர்
4 மற்றும் 5 வயது மாணவர்கள்
12.00 - 12:45

பெரியவர்கள்
12:45 - 13:30

Freestyle
பெரியவர்கள்
5 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை
வெள்ளிக் கிழமை
18:00 - 19:00
சிறியவர்
1 ஆம் ஆண்டில் இருந்து 4 ஆம் வகுப்பு வரை
சனிக்கிழமை
12:30 - 13:30

பரதநாட்டியம்.
சனிக்கிழமை
12:30 - 13:30

நிதி 2024
இதுவரை அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? கட்டண அறவீட்டு தகவல் கிடைக்கவில்லையா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no
குறிப்பு:
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக் வளாகத்தின் முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் அனுப்பப்படும்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
09.06.2024 விளையாட்டுப்போட்டி.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_16-2024 (PDF)