வாராந்தத் தகவல் 13.04.2024 Ukasinfo 15-2024
வணக்கம்!
13.04.2024 சித்திரை விழா, Åsen skole
பாடசாலை வழமை போல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும். சித்திரை விழா நிகழ்ச்சிகள் 10.00 ஆரம்பமாகும்.
13.04.2024 அன்று நடைபெறும் சித்திரை விழா ஓசன் பாடசாலையின் மேற்கட்டிடத்தில் உள்ள கீழ் மண்டபத்தில் நடைபெற இருப்பதால் இட பற்றாக்குறை மற்றும் பாதுகாப்புக் கருதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே மண்டபத்தினுள் நேரடி நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவர். பெற்றோருக்காக பிரத்தியேகமாக மேல் மண்டபத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பாக திரையில் காண்பிக்கப்படும். புரிந்துணர்வுக்கு நன்றி.
நிகழ்ச்சி நிரல் (link)
மதிப்புக்குரிய பெற்றோர்களுக்கு ஒரு பணிவான அறிவித்தல்.
எதிர்வரும் 13.04.2024 சனிக்கிழமை சித்திரை விழாவை முன்னிட்டு தேநீர்ச்சாலை பெற்றோருக்காக அலுவலகம் அமைந்துள்ள கீழ்க் கட்டிடத்தில் இயங்கு நிலையில் இருக்கும்.
சித்திரை விழா நிகழ்வின் இடைவேளை நேரமாகிய 30 நிமிடங்கள் மட்டும் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக பெற்றோர்கள் பாவிக்கும் இடத்தை ( மேற்கட்டிடத்தின் மேல் மண்டபத்தை ) அதற்காக ஒதுக்க வேண்டி இருப்பதால் அந்த இடத்தை அவ்வேளை மட்டும் பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுகின்றோம்.
புரிதலுக்கு நன்றி.
14.04.2024 சிறுவர் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் றொம்மன் வளாகத்தில் நடைபெறும்.
விளையாட்டுப்போட்டி 2024
கடந்த சனிக்கிழமை இல்லங்களுக்கான பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு குழு தெரிவு நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்டவர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
நிதி 2024
இதுவரை அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? கட்டண அறவீட்டு தகவல் கிடைக்கவில்லையா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no
குறிப்பு:
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக் வளாகத்தின் முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் அனுப்பப்படும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
14.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) சிறுவர் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் றொம்மன் வளாகத்தில் நடைபெறும். நேரம் பின்பு அறியத்தரப்படும்.
09.06.2024 விளையாட்டுப்போட்டி.
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்