லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 14 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 06.04.2024 Ukasinfo 14-2024


வணக்கம்!

எல்லோரும் ஈஸ்டர் விடுமுறையை நன்றாக களித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

கல்வி – சனிக்கிழமை - 09:30 -13:00 (10:45 - 11:15)
-சித்திரை விழாவை முன்னிட்டு அந்த விழா நாள் (13.04.2024) வரைக்கும் பாடசாலை நிறைவடையும் நேரம் 13.00 மணியாக அறிவிக்கின்றோம்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.

கலைப்பாடத்திற்கு புதிதாக இணைய வரும் மாணவர்களை சித்திரை விழா நாள் அதாவது 13.04.2024 வரை இணைப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளோம்.
புதிதாக இணைய விரும்பும் மாணவர்கள் சித்திரை விழா முடிந்த அடுத்த கிழமையே ஆரம்பிக்கலாம்.
சித்திரை விழா முடிந்து புதிதாக ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு மாத இலவச பயிற்சி மட்டுமே வழங்கப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு கலைப் பொறுப்பாளரை தொடர்பு கொள்ளவும்.

06.04.2024 கூட்டங்கள்
ஆண்டுக்கூட்டம் 2024 -பகுதி 2
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம்.
நேரம்: 09:45-10:30

விளையாட்டுப்போட்டி 2024 - இல்லப் பொறுப்பாளர் தெரிவு
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம்.
நேரம்: 11:15-11:45

13.04.2024 சித்திரை விழா, Åsen skole
13.04.2024 அன்று நடைபெறும் சித்திரை விழா ஓசன் பாடசாலையின் மேற்கட்டிடத்தில் உள்ள கீழ் மண்டபத்தில் நடைபெற இருப்பதால் இட பற்றாக்குறை மற்றும் பாதுகாப்புக் கருதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே மண்டபத்தினுள் நேரடி நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவர். பெற்றோருக்காக பிரத்தியேகமாக மேல் மண்டபத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பாக திரையில் காண்பிக்கப்படும். புரிந்துணர்வுக்கு நன்றி.

நிதி 2024
இதுவரை அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? கட்டண அறவீட்டு தகவல் கிடைக்கவில்லையா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no
குறிப்பு:
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக் வளாகத்தின் முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் அனுப்பப்படும்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
06.04.2024 பெற்றோர் கூட்டம் - ஆண்டுக்கூட்டத்தின் தொடர்ச்சி, இல்லப் பொறுப்பாளர் தெரிவு
13.04.2024 சித்திரை விழா, Åsen skole
14.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) சிறுவர் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் றொம்மன் வளாகத்தில் நடைபெறும். நேரம் பின்பு அறியத்தரப்படும்.
09.06.2024 விளையாட்டுப்போட்டி.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_14-2024 (PDF)