லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 11 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 16.03.2024 Ukasinfo 11-2024

வணக்கம்!

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
-கல்வி வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

கடந்த சனிக்கிழமை - கதை சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் இடம்பெற்றது, பங்குகொண்டு சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பேச்சுப் போட்டியில் தெரிவான மாணவர்களுக்கான தேசிய மட்டத்திலான பேச்சுப் போட்டி 16.03.2024 றொம்மன் வளாகத்தில் நடைபெறும்.

நேர விபரம்:

கவனத்திற்கு!
-மாணவர்கள் எமது கலாச்சார உடையணிந்து போட்டிக்கு வருவது அவசியம்.
-போட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்கு குறைந்த பட்சம் 10 நிமிடங்களுக்கு முன்னர் வருகை தருவது அவசியம்.
-போட்டி நிறைவடைந்த பின்னர் தாமதமாக வரும் போட்டியாளர் போட்டியில் பங்கு கொள்ளும் தகமையை இழந்து விடுவார்.
-போட்டியில் தாமதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்பதையும் முற்கூட்டியே அறியத்தருகிறோம்.

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.

16.03.2024 விளையாட்டுப்போட்டி 2024 - பெற்றோர் கூட்டம்
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம்.
நேரம்: 10:00

விளையாட்டுப்போட்டி 2024 - பெற்றோர் கூட்ட நிகழ்ச்சிநிரல்.
-உறுப்பினர்கள்
-விளையாட்டுப் போட்டி என்றால் என்ன
-இல்லங்கள் -போட்டிகள்
-முடிவுகள்
-விளையாட்டுப் போட்டிக்கான குழு
-இல்ல பொறுப்பாளர்கள்

நிதி 2024
இதுவரை அறவிடப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.

உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? கட்டண அறவீட்டு தகவல் கிடைக்கவில்லையா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல்: faktura.lorenskog@annai.no

குறிப்பு:
எதிர்வரும் விளையாட்டு போட்டி, பாடசாலை சார்ந்த பொறுப்புகள் மற்றும் கல்வி ஆண்டு 2024/2025 பங்கு பெறுவதற்கு முழுமை பெற்ற அங்கத்தவராக இருக்க வேண்டும்.

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக் வளாகத்தின் முழுமை பெற்ற உறுப்பினர் பட்டியல் அனுப்பப்படும்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
13.04.2024 சித்திரை விழா, Åsen skole
14.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) சிறுவர் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் றொம்மன் வளாகத்தில் நடைபெறும். நேரம் பின்பு அறியத்தரப்படும்.
09.06.2024 விளையாட்டுப்போட்டியும்.

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_11-2024