லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 10 -அன்னை தமிழ்முற்ற தெரிவு போட்டிகள் – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 09.03.2024 Ukasinfo 10-2024

வணக்கம்!

ஆண்டுக்கூட்டம் 2024 – 02.03.2024
நடை பெற்ற ஆண்டுக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் முற்றுப்பெறாமல் கூட்டம் கலைந்தது மனவருத்தத்தை தருவதாக அமைந்தது.

முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், வரவு செலவு கணக்குகள் சரிபார்த்து கொள்வதற்கும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று இரண்டு பெற்றோர் மட்டுமே இறுதிவரை இருந்தார்கள். மற்றைய பெற்றோர்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டார்கள். இது ஒரு முக்கிய கூட்டத்தை அவமதிக்கும் விடயமாக கருதுகிறோம்.

இது எந்தவித எதிர்பார்ப்புமின்றி பணி செய்யும் எங்கள் மனதை வலுவிழக்க செய்வதாக உணருகின்றோம்.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!

எனிவரும் காலங்களில் இத்தவறுகளை திருத்திக் கொண்டு புரிந்துணர்வோடு பயணிப்போம். அந்த வகையில் வெகு விரைவில் பெற்றோர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படும். அதற்கு உங்கள் நேரங்களை ஒதுக்கி நடந்த கூட்டத்தில் எட்டப்படாத முடிவுகளுக்கு தீர்வு காணவேண்டிய அவசியம் இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு கூட்டம் முற்றுப்பெறும் வரை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

கல்வி – சனிக்கிழமை - 09:30 -12:30 (10:45 - 11:15)
-கல்வி வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

-அன்னை தமிழ்முற்ற தெரிவு போட்டிகள் 09.03.2024

எதிர்வரும் 09.03.2024 சனிக்கிழமை பேச்சுப்போட்டி, திருக்குறள்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டிக்கான தெரிவுகள் லோறன்ஸ்கூக் வளாகத்தில் நடைபெறும். ஆகவே பிள்ளைகளை தயாராக அனுப்ப வேண்டிய பொறுப்பு உங்களிடமே. பேச்சுப் போட்டியில் தெரிவாகும் மாணவர்களுக்கான தேசிய மட்டத்திலான பேச்சுப் போட்டி 16.03.2024 றொம்மன் வளாகத்தின் நடைபெறும். அதற்கான நேர விபரம் பின்னர் அறியத்தரப்படும். அதே போன்று தேசிய மட்டத்திலான திருக்குறள் மற்றும் கதை சொல்லும் போட்டிகள் ஏப்பிரல் மாதத்தில் நடைபெறும் நேர விபரம் பின்னர் அறியத்தரப்படும். இதுவே இதுவரை அன்னை தமிழ் முற்றக்குழுவிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்.

அன்பார்ந்த பெற்றோர்களே!
எமது வளாகத்தில் நடைபெறும் தெரிவுப்போட்டியில் பங்கு கொள்ளும் மாணவர்கள் எமது கலாச்சார உடையணிந்து வருவது அவசியம். அதே போன்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களும் எமது கலாச்சார உடையணிந்து போட்டிக்கு வருவது அவசியம்.

தெரிவுப்போட்டி நடைபெறும் போது அம்மாணவர்களின் பெற்றோர்கள் போட்டிகளை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

போட்டிகளின் நேர விபரம் ;
மேல்மாடி கட்டிடத்தில் நடைபெறும் போட்டிகள்
கதைசொல்லல் போட்டி
சிறுவர் நிலை - 10.00 மணி
1ம் வகுப்பு - 10.00 மணி
2ம் வகுப்பு - 11.00 மணி
3ம் வகுப்பு - 12.00 மணி

கீழ்மாடி கட்டிடத்தில் நடைபெறும் போட்டிகள்
4, 5, 6, 7ம் வகுப்புகள் பேச்சுப்போட்டி
4ம் வகுப்பு - 10.00 மணி
5ம் வகுப்பு - 10.45 மணி
6ம் வகுப்பு - 11.30 மணி
7ம் வகுப்பு - 12.00 மணி

4, 5, 6ம் வகுப்புகள் திருக்குறள் போட்டி
6ம் வகுப்பு - 10.00 மணி
5ம் வகுப்பு - 11.00 மணி
4ம் வகுப்பு - 12.00 மணி

7, 8, 9ம் வகுப்புகள் திருக்குறள் போட்டி
7ம் வகுப்பு - 10.00 மணி
8ம் வகுப்பு - 11.00 மணி
9 ம் வகுப்பு - 12.00 மணி

கலைவகுப்புகள் - சனிக்கிழமை
வழமைபோல் வழங்கப்பட்ட நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
16.03.2024 விளையாட்டுப்போட்டி 2024 - பெற்றோர் கூட்டம்
13.04.2024 சித்திரை விழா, Åsen skole
09.06.2024 விளையாட்டுப்போட்டி

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்