றொம்மன்

பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் நேற்றையதினம்(03.03. 2024) மிகச் சிறப்பாக இணையவழியில் (Teamsஇல்) நடைபெற்றது. இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து நிற்கின்றோம்.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

கடந்த 17.02.2024 அன்று எம்மால் ஒழுங்குசெய்யப்பட்ட அங்கத்தவர் தகவல் கூட்டத்தில் (பெற்றோர் கூட்டத்தில்) நாம் அறிவித்ததுபோல் யாப்பு விதிமுறைகளுக்கமைய நிர்வாகம் பரிந்துரைக்கும் நிர்வாகத் தெரிவுக்குழுவினை பெற்றோரின் ஒப்புதல் பெறும் பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் நேற்றையதினம்(03.03.
2024) மிகச் சிறப்பாக இணையவழியில் (Teamsஇல்) நடைபெற்றது. இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து நிற்கின்றோம்.

*கூட்டத்தில் பங்குகொண்ட அங்கத்தவர் மொத்த எண்ணிக்கை:* 84

*நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவல்:*

1. விருந்தினர் Guest போன்று மற்றும் தங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலிலிருந்து இணைந்திருப்பவர்கள் இதிலிருந்து நீங்கி, தங்கள் பிள்ளைகளின் பெயரில் வழங்கப்பட்ட மின்னஞ்சலிலிருந்து வரவும்.

2. யாராவது ஏதாவது கருத்துக்கூற விரும்பினால் அவர்கள் தங்கள் கைகளை உயர்த்துவது போன்று காண்பித்தால் அவர்களுக்குரிய ஒலிவாங்கியும் காணொளியும் திறக்கப்படும்.

3. யாராவது ஏதாவது கூறவிரும்பினால் chat பகுதியில் தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

*ஒப்புதல் எடுக்கப்பட்ட விடயங்கள்.*

1. கூட்ட அழைப்புக்கான ஒப்புதல். (மறுப்புத் தெரிவித்தவர்கள் ஐவர் மட்டுமே)

2. நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகத்தெரிவுக்குழு மூவரின் பெயர்களும் கூறப்பட்டு அங்கத்தவர்கள் முன்னிலையில் ஒப்புதல் பெறப்பட்டது (55பேர் ஒப்புதலளித்துள்ளனர்).

அனைத்து தெரிவுகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகளையும் அனைத்து பெற்றோர் அங்கத்தவர்களும் இணையவழியில் நேரடியாக எல்லோரும் காணக்கூடியதாகவே இருந்தது.

இணையவழிக்கூட்டம் என்பதனால் கூட்டம் ஒளி மற்றும் ஒலிப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அத்துடன் பதிவிற்காக கூட்ட அறிக்கையும் எழுதப்பட்டிருந்தது.

19.02.2024 வரை எடுக்கப்பட்ட பதிவின்படி உறுப்பினர் உரிமை முழுமையாகப் பெற்ற அங்கத்தவர்கள் எண்ணிக்கை 286 எனவும் அதில் 72பேர் ( enkelt medlemmer) அதாவது 10,11,13ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் மாணவர்கள். இவர்களின் பெற்றோர்களுக்கு யாப்பின் படி வாக்குரிமை இல்லை.

பங்குகொண்டு சிறப்பித்தவர்கள் அனைவரும் றொம்மன் வளாகப் பெற்றோர்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றோம்.

கூட்டத்தில் பங்குகொண்டு ஒத்துழைப்புத் தந்த அனைத்து பெற்றோருக்கும் நன்றி.

இதே போன்று 09.03.2024 நடைபெறவிருக்கும் வருடாந்த ஆண்டுக்கூட்டத்திலும் முழுமையாக உறுப்பினர் உரிமைபெற்ற அனைவரும் கலந்து சிறந்த முறையில் நிர்வாகத்தெரிவினையும் நடாத்த ஒத்துழைப்புத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

*நடைபெற்ற நிர்வாகத் தெரிவுக்குழு தெரிவுக்கான பிரத்தியேக இணையவழி ஆண்டுக்கூட்டத்தில் சிலரால் இணைந்து கொள்ளமுடியாமல் போனதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆராய்ந்து பார்த்ததில் அவர்கள் நாம் இச்சந்திப்பிற்காக அனுப்பிய இணைப்பிற்குப் பதிலாக சோதனைக்காக அனுப்பிய Microsoft இணைப்பினை அழுத்திப் பார்த்தவண்ணம் இருந்துள்ளனர்.எனவே அடுத்து வரும் சந்திப்புகளில் இவ்வாறான தொழில்நுட்ப பாவனைத் தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு முயற்சி எடுப்போம்.
1) கூட்ட அழைப்பிற்கான இணைப்பினை பாடசாலையில் பதியப்பட்டுள்ள தங்களது மின்னஞ்சலுக்கும், viber குழுமத்துக்கும் அனுப்புதல்.

2) வளாகத்தால் உருவாக்கப்பட்ட Viber குழுமத்தில் இணைவதன் மூலம் தகவல்களை சரியாக பெறுதல்

3) கூட்டம் தொடங்குவதற்கு 60 மணித்துளிகளுக்கு முன் உள்ளே நுழைய சிரமமான வர்கள் தங்கள் இணைப்பும் கடவுச் சொல்லும் வேலை செய்வதை உறுதி செய்து கூட்டத்துக்கு உள்நுழைதல்.
ஒழுங்குமுறையில் அனைவரையும் இணைத்துச் சந்திப்பினைச் சிறப்பாக நடாத்துவோம்.

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் வளாகம்.