லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 06 – 2024 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 06-2024
இணைப்புகளைப் பார்க்கவும்:

Ukasinfo_06-2024

உள்ளடக்கம்
-கல்வி & கலை 10.02.2024
-அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2024
- குறும்பட போட்டி 2024 - புளுரோ வளாகம்.
- சர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையம்.
-ஆண்டுக்கூட்டம் 2024 – 02.03.2024
02.03.2024 அன்று எமது ஆண்டுக்கூட்டம் நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே!
நாம் ஏற்கனவே அறிவித்தது போல் அக்கூட்டத்திலே நீங்கள் முன்வைக்க விரும்பும் கேள்விகளை 31.01.2024 இற்கு முன் அனுப்பி இருக்க வேண்டும். அப்படி அனுப்பப்பட்ட கேள்விகளுக்கே எம்மால் பதிலளிக்க முடியும். அதுவும் முழுமை பெற்ற அங்கத்தவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே! அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு (vår) இலைதளிர் காலம் வரையான தவணைக் கட்டணங்களை செலுத்தியவர்களாக இருத்தல் வேண்டும்.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல் முகவரி: nandhakumarj@annai.no

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

ITAC_Eksamensinfo-2024-v01

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்