றொம்மன்

இன்று 05.01.24 வெள்ளியன்று மாணவர்களின் கற்கைச் சூழலுக்கான அமைதியையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு றொம்மன் வளாகத்தின் கற்கைச் செயற்பாடுகளையும்,பொங்கல்விழா நிகழ்வின் பயிற்சிகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்பான பெற்றோர்களே!

 

இன்று 05.01.24 வெள்ளியன்று மாணவர்களின் கற்கைச் சூழலுக்கான அமைதியையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு றொம்மன் வளாகத்தின் கற்கைச் செயற்பாடுகளையும்,பொங்கல்விழா நிகழ்வின் பயிற்சிகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை தங்கள் அனைவருக்கும் வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

 

சட்டநெறி, பண்பு நெறிகளை மீறும் செயற்பாடுகளில் ஈடுபடும் சிலர் இன்று எமது கட்டடத்தொகுதியில் எதுவித முன் அனுமதியுமின்றி கூட்டம் ஒன்றை, அதுவும் கற்கை நேரத்தில், தன்னிச்சையாகக் கூட்டுவதற்கு விளம்பரம் செய்து, அறிவித்துள்ளனர்.

 

இவர்களின் இன்றைய அனுமதியற்ற , வளாக நடைமுறைக்கு மாறான கூட்ட முன்னெடுப்பானது அன்னையின் கற்கைச் சூழலுக்குரிய அமைதியைப் புறக்கணிப்பதோடு மட்டுமன்றி, கட்டட உரிமையாளரிடமும் தகைமையான முறையில் பாவனைக்கான ஒப்புதலைப் பெறாது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தாம் நினைத்தவாறு உரிமை கொண்டாடும் குழப்பகரமான நிலையை இவர்கள் தோற்றுவித்திருப்பதால் நிலைமையின் தீவிரத் தன்மையை கருத்திற்கொண்டு வளாகத்தின் கற்கைச் செயற்பாடுகளை இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம்  தற்காலிகமாக நிறுத்தவேண்டும் என்ற இந்த முடிவு எமது விருப்பத்துக்கு அப்பாற்பட்டு சட்ட ஆலோசனையின் நிமித்தம் மேற்கொள்ளப்படுகிறது.

 

தான்தோன்றித் தனமாகக் கூட்டமொன்றைக் கூட்டுவதற்கு கட்டடத்தின் உரிமையாளர் போன்று முறைகேடாக விளம்பரம் செய்து, நிறுவன நடைமுறைகளை மீறி அதை நடாத்த முடியாது என்பதைக் கட்டட உரிமையாளர்  ஒழுங்கு முறைதவறி கூட்டத்தை அறிவித்தோருக்கு எழுத்து வடிவில் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இருந்தபோதும், இந்த அறிவுறுத்தலை மீறி, தமக்கே அதிகாரம் உள்ளது போன்ற தோரணையில் மிகவும் தீவிரமான போக்கில் தமது நடவடிக்கைகளை குறித்த கூட்டத்தை அறிவித்தோர் தொடர்கின்றனர்.

 

பண்பற்ற வாக்குவாதங்களையும் ஒழுங்கற்ற நடவடிக்கைகளையும் மாணவர் முன்னிலையில் தவிர்க்கவேண்டியதன் அவசியத்தையும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

 

பிள்ளைகளதும் மாணவர்களதும் கற்கைக்கான அமைதிச் சூழலும் பாதுகாப்பும் பேணப்படுவது அனைத்துக் கரிசனைகளை விடவும் முதலிடம் பெற வேண்டியது என்ற சட்ட ஆலோசனையின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, கற்கை நேரத்தில் குழப்பகரமான சூழலைத் தவிர்க்கும் நோக்கோடு நிருவாகம் தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

இன்றைய நாளில் எமது வளாகத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் மேற்படி குழுவினரே இந்தச் சட்டரீதியான முடிவிற்கு முதற்காரணமும் முழுப்பொறுப்பும் என்பதையும் இங்கு எமது நிருவாகம் சுட்டிக்காட்டுகின்றது.

 

கற்கைச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்தவித முரண்பாடுகளும் நிறுவன ஒழுங்குகள் ஊடாக, அல்லது அவை சரிவராத இடத்து சட்டபூர்வ வழிமுறைகளூடாக எழுத்து மூலமான ஆவணப்படுத்தலுடன் நடைபெறவேண்டியவை.

 

ஜனநாயகமும் சட்டத்துக்கேற்ப ஒழுகுதலும் வேண்டுமென்றே சீர்குலைக்கப்படுவது ஒரு சமூகத்துக்கு அழகல்ல.

 

நிறுவன அமைதிக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் ஒரு சிலரின் பின்னணியால் தூண்டிவிடப்பட்டு இயங்கும் குழு தொடர்பாகவும், இக்குழுவிற்குப் பின்னணியில் இருந்து செயற்படுபவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் எண்ணி மனம் வருந்துகிறோம்.

 

கட்டுக்கோப்புடனும் சனநாயக நெறிகளுடனும்  தேசிய சிந்தனையில் ஒன்றிணைந்து செயற்படும் எமது தமிழ்க் குமுகாயத்தைத் துண்டாடி, தமது பலப்பிரயோகத்தின் மூலம் அன்னையை கையகப்படுத்தும் கபடமான திட்டத்திற்கு துணை நிற்கும் சத்திகளை இனம் கண்டுகொள்ளுமாறு அனைத்துப் பெற்றோர்களையும் வேண்டிக்கொள்கிறோம்.

சனநாயகப் பண்புகளையும்  சட்டநெறி மற்றும் நிறுவனப் பண்புநெறிகளையும் பின்பற்றி வரும் எம் குமுகாயத்தில் ஏற்படுத்தப்பட்டுவரும் இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் துணை போகாது எமது அங்கத்தவர்களை விலகி நிற்குமாறும் இத்தால் வேண்டுகிறோம்.

 

எமது நிறுவனத்தால் முறைப்படி நடாத்தப்படும் கூட்டங்களில் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து, மாணவர்களின் நலனை முன்நிறுத்தி நிறுவனப் பண்போடு இயங்கிவரும் அன்னையின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்போடும் பண்போடும் வேண்டுகிறோம்.

 

 

அன்னை தலைமை நிருவாகம்,

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்