றொம்மன்

பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்பார்ந்த அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் வளாக பெற்றோர்களே!

றொம்மன் வளாகத்தின் செயற்பாடுகளை குழப்பும் நோக்கோடு சட்டநெறி, பண்பு நெறிகளை மீறும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதை நீங்கள் அறிவீர்கள்.

இச்சிறிய குழுவினரால் 05.01..2024 ல் கூட்டம் நடைபெறவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகிறது. இக்கூட்ட அழைப்பிற்கும், அன்னைபூபதி றொம்மன் வளாக நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறியத்தருகின்றோம்.

யாப்பு விதிகளுக்கு அமைவாக பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் றொம்மன் வளாகத்தில் நடைபெறுவதானால் அதற்கு அங்கத்தவர்களின் மூன்றில் ஒரு பங்கு அங்கத்தவர் இக் கோரிக்கையை எழுத்துமூலம் நிருவாகத்திடம் முன்வைத்திருத்தல் அவசியம். தமக்கு மூன்றில் ஒரு( 1/3 ) பகுதியினர் ஒப்புதல் தந்துள்ளனர் என்று கூறும் இச்சிறிய குழுவினர் இதுவரை எதுவித ஆவணங்களையும் எம்மிடம் கையளிக்கவில்லை .
ஆண்டுக்கூட்டத்தைக் கூட்டுவதற்காக பெற்றோர்கள் தமக்கு ஒப்புதல் தந்துள்ளார்கள் என்று கூறும் இவர்கள், அதற்கான உத்தியோகபூர்வமான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்பதனையும் அறியத்தருகின்றோம்.

முக்கிய குறிப்பு:
ஆண்டுத்திட்டத்தில் உள்ளவாறு 09.03.2024 சனியன்று றொம்மன் வளாகத்தின் ஆண்டுக் கூட்டம் இடம்பெறும் என்பதை மீண்டும் அறியத்தருகின்றோம்.

நன்றி.
அன்புடன்
றொம்மன் வளாகப்பொறுப்பாளர்
இ. புஸ்பராணி