விழிநீர் வணக்கம்
நோர்வேயில் நீண்டகாலம் தமிழ்க் கற்பித்தலில் ஒரு முன்னோடியாக இருந்தவரும் எமது வளாகத்தின் முன்னால் ஆசானுமாகிய அமரர் நாகரட்ணம் மாஸ்ரர் அவர்கள் இன்று (06.11.2023) இறைவனடி சேர்ந்தார்.
தமிழ்க்கல்வி சார்ந்து எந்த உதவியை எந்நேரம் கேட்டாலும் உடன் முன்னிற்கும் அவரது பணி அளப்பெரியது. அவரின் இழப்பு உண்மையில் எம்மை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எமது பாடசாலையில் கடந்த வருடங்களில் உயர்தர தமிழ்த் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகுப்பு எடுத்து மாணவர்களை ஊக்குவித்தும் எமது வளாகத்திற்கு உறுதுணையாகவும் நின்றவர். அவரது ஆசான் பணி எங்கள் பாடசாலையில் மிகப் பெரிய அளவில் இருந்தது. எமது தமிழ்ச் சமுதாயம் ஒரு நல்ல ஆசானையும் இவ்வுலகம் ஒரு தன்னலமற்ற நல்ல மனிதனையும் இழந்து விட்டது.
அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் உயிர் அமைதிபெற்று இறைவனடி சேர வணங்குகின்றோம்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி..
ஆழ்ந்த கவலையுடன்..
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இவர்களுடன் நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்