மொட்டன்ஸ்றூட்

மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி. 11.11. 2023

அறிவித்தல்
வளாகம் முகப்பு

மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி. 2023
• ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 1மணிநேரம் வழங்கப்படும்.
• பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில் போட்டி நடைபெறும்.
• ஓவியத்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
• வரையப்போகும் ஓவியத்தை வீட்டில் பயிற்சி செய்துகொள்ளலாம்.
• பயிற்சி செய்த ஓவியத்தாள்.போட்டி நடைபெறும்போது வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.
• மாணவர்களுக்கான சுட்டிலங்கங்களை வளாகங்கள் போட்டித்தாளின் பின்புறத்தில் எழுதிவிடுதல் வேண்டும்.
• ஓவியத்தாளை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும். (வரைந்து, வர்ணம் தீட்டியிருத்தல் வேண்டும்)
• ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புக்களில் ஒன்றை மட்டுமே போட்டியாளர்கள் தெரிவு செய்து வரைந்து, வர்ணம்தீட்டுதல் வேண்டும்.
• வளாகங்களின் விருப்பிற்கமைவாக போட்டிகள் (5ம்;,6ம் ) (7ம்,8ம்) (9ம்,10ம்) (11ம்,12ம்) வகுப்பு என நான்கு பிரிவுகளாக நடைபெறும்.

போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளும் பிரிவுகளும்.

பிரிவு 1 (5ம்,6ம் வகுப்பு )
(1) தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று அல்லது
(2) நடுகல் வழிபாடு
பிரிவு 2 (7ம்,8ம் வகுப்பு )
(1) மாவீரர் துயிலுமில்லம் அல்லது
(2) தமிழீழ வரைபடம். (தமிழரின் பூர்வீக பிரதேசங்களின பெயர்களுடன்)
பிரிவு 3 (9ம்,10ம் வகுப்பு )
(1) நல்லூரில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அல்லது
(2) ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்.
பிரிவு 4 (11ம்,12ம் வகுப்பு )
(1) முள்ளிவாய்க்கால் பேரவலம் அல்லது
(2) தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பிரிவுகளான தரை,கடல்,வான்,கரும்புலி,வேவுப்புலி