றொம்மன்

22.10.2023 மேலதிக பெற்றோர் தகவற்கூட்டம்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்பார்ந்த பெற்றோர்களே!றொம்மன் வளாக நிருவாகம் மேலதிக பெற்றோர் தகவற்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறது.

காலம்: 22.10.23 ஞாயிற்றுக்கிழமை
12.00 - 14.00 மணிவரை
3 ம்மாடி ( றொம்மன் வளாக) மண்டபத்தில் நடைபெறும்.

கூட்டம் அன்னை தலைமை நிருவாகத்தால் நடாத்தப்படும்.

நிகழ்ச்சி நிரல்

1)அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூட யாப்பு உருவாக்கம் பற்றியது. (இதற்கான நேரம் 20 நிமிடங்கள்- ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 10 நிமிடங்கள் கேள்வி பதில் நேரம் )
2) தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அமைப்பு - 3)செயல்பாட்டு வடிவம்
4) பொதுவான நிறுவன நடைமுறைகள். (20நிமிடம் - 5 நிமிடம் கேள்விபதில்)

5) யாப்பு - அன்னை நிறுவன ஒழுங்கு முறைகள். புதியவர்களை உள்வாங்கும் வழிமுறைகள். அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடக் கட்டமைப்பு மற்றும் கடந்து வந்த பாதைகள். (40 நிமிடம் - 20 நிமிடம் கேள்வி பதில்)

6) றொம்மன் வளாகப் பொறுப்பாளர் மீது பொது வெளிப்பரப்பில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தரம் தாழ்ந்த அவதூறுத் தாக்குதல்கள். இதற்கான நடவடிக்கைகள்.

கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனமாக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகிறோம். நிறுவனத்தின் நேர்த்தியான செயற்பாடுகளைச் சீர்குலைக்கும் செயற்பாடுகள் பொதுவெளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருமளவான பெற்றோர்கள் அவற்றின் உண்மைத்தன்மைகள் பற்றி எங்களுடன் தொடர்பு கொண்டு தெளிவு பெற்று வருகிறார்கள். எனினும், நிறுவன நடைமுறைகள் பற்றி சரியான விளக்கங்களை பெற்று எமது கலைக்கூட வளர்ச்சிக்கு ஒத்துழைப்பை மேற்கொள்ளுமாறு நடப்பாண்டு அங்கத்தவர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றும் தகுதிபடைத்தவர்கள் .

நடப்புக் கல்வியாண்டில் றொம்மன் வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர். குறிப்பாக: முழுமையான அங்கத்தவர் கட்டணம், தவணைக்கட்டணங்கள் என்பவற்றைச் செலுத்தியிருப்பின் மேலதிக பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
நன்றி.

அன்புடன்,