லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 38 – 2023 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்,

இணைப்புகளைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 38-2023

Ukas info for uke 38-2023

உள்ளடக்கம்

  • கல்வி – 23.09.2023
  • ஆசிரியர்களுக்கான பட்டறை இடம்பெறும்
  • அனைத்துலக அறிவாடல் போட்டி 2023
  • கண்காட்சி – 23.09.2023
  • கலை
  • தேநீர்ச்சாலை – முக்கிய கவனம்!
  • நிதி 2023
  • வளாக நிகழ்வுகள் 2023 விபரம்.

 

  1. ஒலிவடிவம் - வாராந்தத் தகவல் கிழமை 38 – 2023

LYD - Ukas info for uke 38 - 2023.m4a

 

  1. நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் (NTHO) அறிவித்தல்.

ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய சுகாதாரசேவை. இணைப்பைப் பார்க்கவும்.

  1. குறும்படப்போட்டி 2024 – அன்னை பூபதி ஃப்லூறோ (Florø) வளாகம்.

குறும்பட போட்டி 2024 (annai.no)

 

  1. செய்நிரல் குறிமுறையாக்கம் - Program Koding

செய்நிரல் குறிமுறையாக்கம் அல்லது நிரல் எழுதல் என்பதை கணினிகளுடன் தொடர்பு கொள்ள ஒப்பளி(அனுமதி)க்கும் மொழிகள் என்று அழைக்கிறோம்.

இது பிள்ளைகள் விளையாடிக் கற்கும் ஒரு வேடிக்கையான கொடைமுனைவு (சலுகை) ஆகும், அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவுகிறது.

இந்த திட்டம் 5 முதல் 13 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஏற்றது. இதற்கு முன் அறிவு தேவையில்லை. தொடர்பு கொள்க:: த. வ. ஆ. மையம்.

 

 

முக்கிய கவனம்!!

  1. எப்பொழுதும் வாகனங்களை அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil,politibil, ambulanse osv) நிற்பாட்டுதல் அவசியமென்பதை நினைவிற்கொள்க!
  2. பாடசாலை நேரத்தினைத் தவிர்த்து எந்தவொரு சிற்றுந்துகளும் (வாகனங்களும்) பாடசாலை வளாகத்தில் நிறுத்துவதற்கு ஒப்புதலில்லை. பாடசாலை முடிந்தவுடன் வளாகத்தின் வெளியே உள்ள இரும்புத் தடை அடைக்கப்பட்டுவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்