லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 37 – 2023 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்,

இணைப்புகளைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 37-2023

Ukas info for uke 37-2023

உள்ளடக்கம்

  • கல்வி
  • அனைத்துலக அறிவாடல் போட்டி 2023
  • கலை
  • தேநீர்ச்சாலை – முக்கிய கவனம்!
  • நிதி 2023
  • கண்காட்சி – 23.09.2023
  • வளாக நிகழ்வுகள் 2023 விபரம்.
  • நிழற்படங்கள் (பக்கம் 3)

 

  1. ஒலிவடிவம் - வாராந்தத் தகவல் கிழமை 37 – 2023

LYD - Ukas info for uke 37 - 2023.m4a

 

  1. உயர் தர தமிழ் மொழித் தேர்வுக்கான பதிவு - இறுதிக் காலம் 15.09.2023

உயர் கல்வித் தேர்வில் (videregående) தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்கள், தமது பதிவை கல்வி வலயத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

சில நோர்வேயிய பாடசாலைகள் தமிழ் மொழித் தேர்வுக்கான பதிவுகளை தாமாகவே மேற்கொண்டு தருகின்றன. இப்படிப் பதிய முடியாத மாணவர்கள் பலர் தமது பதிவுகளை தனித்துப் பதியவேண்டும்.

இதற்கான இணைப்பு இங்கே:- InSchool Privatist (visma.no)

 

முக்கிய கவனம்!!

  1. எப்பொழுதும் வாகனங்களை அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil,politibil, ambulanse osv) நிற்பாட்டுதல் அவசியமென்பதை நினைவிற்கொள்க!
  2. பாடசாலை நேரத்தினைத் தவிர்த்து எந்தவொரு சிற்றுந்துகளும் (வாகனங்களும்) பாடசாலை வளாகத்தில் நிறுத்துவதற்கு ஒப்புதலில்லை. பாடசாலை முடிந்தவுடன் வளாகத்தின் வெளியே உள்ள இரும்புத் தடை அடைக்கப்பட்டுவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்