லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 23 – 2023 – கோடைகால ஒன்றுகூடல் மற்றும் விளையாட்டுப்போட்டி 2023

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்,

இணைப்புகளைப் பார்க்கவும்:

 1. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 23-2023

உள்ளடக்கம்

 • கோடைகால ஒன்றுகூடல் 10.06.2023
 • விளையாட்டுப்போட்டி 2023 – பயிற்சி நாட்கள் விபரம்
 • கல்வி - பாடசாலை 09:30 – தேர்ச்சி அட்டைகள் வழங்கப்படும்.
 • கலை - விடுமுறை
 • அனைத்துலக அறிவாடல் போட்டி 2023
 • நிதி 2023

Ukas info for uke 23-2023

 1. லோறன்ஸ்கூக் மற்றும் வைத்வெத் வளாகங்கள் இணைந்து நடாத்தும் 10வது விளையாட்டுப் போட்டி 2023 இற்கான அழைப்பிதழ்

இவ்வாண்டு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும்/பார்வையிட வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இல்லத்திற்கு ஏற்றவாறு உடை அணிந்து வருதல் விரும்பத்தக்கது.

மஞ்சள்(பூபதி) இல்லம்
மேற்சட்டை(T-skorte) - முழுமையான மஞ்சள் நிறம்
காற்சட்டை(Bukse) - கருப்பு நிறம்

சிவப்பு(திலீபன்) இல்லம்
மேற்சட்டை(T-skorte) - முழுமையான சிவப்பு நிறம்
காற்சட்டை(Bukse) - கருப்பு நிறம்

ஏனைய உடைகளாக இருந்தாலும் இல்லத்திற்குப் பொருத்தமானதாக அமைவது விரும்பத்தக்கது.

 

தகவல்:

வளாகப் பொது நிகழ்வுகளிலிருந்து தனிநபர்களால் எடுக்கப்படும் நிழற்படங்கள் மற்றும் ஒலி/ஒளிகள் தனிநபர்களால் பொதுத்தளங்களில் பதிவானால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

 

அத்துடன் படங்கள் மற்றும் ஒலி/ஒளிகளை வெளியிடுபவர்கள் தனிநபர்களிற்கோ அல்லது வளாகத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் வெளியிடுவதைத் தவிர்த்தல் நன்று.

 

குறிப்பு: அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்திற்குரிய தளங்களில் நிகழ்வுப்படங்கள் வெளியிடப்படும்.

 

அனைவரும் இணைந்து இவ் விளையாட்டுப் போட்டியினை மகிழ்வுடன் சிறப்பிப்போம்.

 

 1. கோடைகால ஒன்றுகூடல் 2023 இற்கான அழைப்பிதழ்

 1. விளையாட்டுப்போட்டியில் எமது வளாகப் பெற்றோரால் இணைந்து நடாத்தும் லீமா சிற்றுண்டிச்சாலையில் விற்பனையாகவிருக்கும் உணவுவகைக்கான விலைப்பட்டியல்.

 1. விளையாட்டுப்போட்டியன்று இயங்குநிலையில் விற்பனையில் இருக்கும் நீராகாரம் மற்றும் இனிப்புவகைக்கான விலைப்பட்டியல்.

 

முக்கிய கவனம்!!

 1. எப்பொழுதும் வாகனங்களை அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil,politibil, ambulanse osv) நிற்பாட்டுதல் அவசியமென்பதை நினைவிற்கொள்க!

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

 

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்