லோறன்ன்ஸ்கூக் வளாகம்

விளையாட்டுப் போட்டி 2023இற்கான பதிவுகள் பற்றிய முக்கிய தகவல்.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்,

இணைப்பு 1:

விளையாட்டுப் போட்டி 2023 இற்கான விதிமுறைகள்.

விளையாட்டுப் போட்டிகளுக்கான விதிமுறைகளை முழுமையாகப் படித்து விளங்கிய பின்பு  முன்பதிவுகளை மேற்கொள்ளவும்.

 

இணைப்பு 2:

பிறந்த ஆண்டுகளும் அதற்கான விளையாட்டுகளும்.

 

முன்பதிவு பற்றிய விபரமும் அதற்குரிய படிவமும்.

 

 1. முன்பதிவுக்கான முடிவுத் திகதி 31.05.2023 - பிள்ளைகளுடன் கலந்தாலோசித்து விளையாட்டுகளைத் தெரிவுசெய்து தெளிவான முடிவு எடுத்தபின்பு விளையாட்டுகளைத் பதிவுசெய்யவும். பதிவு மேற்கொண்ட பின்பு மாற்றங்கள் செய்ய ஒப்புதல் இல்லை. முடிவுத் திகதிக்குப் பின் எந்த ஒரு பதிவும் ஏற்கொள்ளப்படமாட்டாது.

 

 1. பதிவுக்கான படிவ இணைப்பை அழுத்திய பின்பு தமது குடும்ப எண்ணைப் பதிவுசெய்து தான் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியும்.

 

 1. ஒரு குடும்ப இலக்கத்திற்காக ஒரு தடவை மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளல் வேண்டும். தவறாகப் பதியப்பட்டு இரண்டாவது தடவை பதியவேண்டிய தேவை ஏற்பட்டால் உடனே வளாக விளையாட்டுப் பொறுப்பாளருடன் தொடர்புகொண்ட பின் பதிவினை மேற்கொள்ளல் வேண்டும்.

 

 1. குடும்ப எண் பதியும்போது ''Not Found'' என்று தகவல் கிடைத்தால் அதற்கான காரணங்கள்...இவைகளாக இருக்கலாம். இதில் ஒன்றாக இருந்தாலும் பதிவுகளை மேற்கொள்ள முடியாது.

 

 • குடும்ப எண் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் முழுமுமையான உறுப்பினர் உரிமை பெறவில்லை - விரைவில் கணக்காளரைத் தொடர்புகொள்ளவும். jude@annai.no

 

 • TBUK - இல் தங்கள் பிள்ளைகளை இன்னும் பதிந்து கட்டணம் செலுத்தவில்லை. 2017ஆம், 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டில் பிறந்தவர்களுக்கு முற்றிலும் இலவசம். இவ்வாண்டு பிறந்த பிள்ளைகளுடன் உடன்பிறந்த பிள்ளைகள் இருப்பின், அவர்களையும் பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் போகலாம். உறுதிசெய்ய விளையாட்டுப் பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளவும். danshiyas@annai.no

 

 • தாங்கள் அழுத்திய குடும்ப எண் தவறாகும்.

 

 1. சிலவேளை 2017,2018 மற்றும் 2019ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்காக அந்தக் குடும்ப எண்ணுடன் பதிவுசெய்யக் கூடியதாக இருந்து அவர்களின் உடன்பிறந்தவர்கள் TBUK-வில் கட்டணம் செலுத்தாமல் பதிவுசெய்திருந்தால் அவர்கள் எமது பதிவில் நீக்கப்படுவார்கள்.

 

 1. ஒரு மாணவன் எத்தனை விளையாட்டுகளில் பதிவு செய்யலாம்?

 

 • 2017,2018 மற்றும் 2019 பிறந்த மாணவர்கள் - வழங்கப்பட்ட 2 விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.

 

 • 2016 முதல் 2007 வரையுள்ள மாணவர்கள் - வழங்கப்பட்ட தனி விளையாடுகளுள் 3 விளையாடுகளைத் தெரிவுசெய்யலாம். தவறுதலாக 3இற்கு மேற்பட்ட விளையாட்டுகளைப் பதிவுசெய்திருந்தால் அதில் எந்த விளையாட்டினை நீக்கவேண்டுமென பதிவுசெய்த உடனே விளையாட்டுப்பொறுப்பாளருக்குத் தகவல் வழங்கல் வேண்டும். தவறினால் 3இற்கும் மேலதிகமாகப் பதிவாகியிருக்கும் விளையாட்டில் ஏதாவது ஒன்று நீக்கப்படும்.

 

 1. குழுநிலை விளையாட்டுகள் - 2012 முதல் 2007 பிறந்தவர்கள் வரை விரும்பினால் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம். பதிவுமேற்கொண்டவர்கள் மட்டுமே இணைக்கப்படுவர்.

விளையாட்டுப் போட்டிக்கான பதிவுளை மேற்கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்: https://www.poopathi.no/aptk/sport/

 

மேலதிக விபரம் தேவைப்படின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

APTK Lørenskog og Veitvet_Sportsregler_2023

Oversikt over fødselsår og leker for sports 2023

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்