கல்வி
அரையாண்டுத்தேர்வுகள் 2025
12.12.2025 வெள்ளிக்கிழமை
13.12.2025 சனிக்கிழமை நடைபெறும்.
கலை
வகுப்புகள் வழமையான நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
நத்தார் விழா 2025
19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
தமிழர் திருநாள் விழா 2026 (பொங்கல்விழா 2026)
17.01.2025 சனிக்கிழமை நடைபெறும். அனைவரும் இந்நாளைக் குறித்துவைக்கவும்.
ஆண்டுக்கூட்டத்தின் சுருக்கம்
30.11.25 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற றொம்மன் வளாக ஆண்டுக்கூட்டம் இனிதே நடைபெற்று முடிவடைந்துள்ளது. கூட்டம் மிகச் சிறப்பாக பல உறுப்பினர்களினதும் உறுப்பினர்களின் பெற்றோர்களினதும் ஆரோக்கியமான கருத்துகளுடன் நடைபெற்றது.
புதிய நிருவாக உறுப்பினர்கள் 7 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் இவர்களுடன் ஏற்கனவே நிருவாகத்தில் பணிபுரியும் இருவரும் சேர்ந்து அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் வளாக நிருவாக உறுப்பினர்களாக 9 பேர் கடமையாற்றுவார்கள். பணிப்பகிர்வு புதிய நிருவாக கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.