வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!
- மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் 21,.11.25ம் திகதி வெள்ளி,11.15 சனி ஆகிய நாள்களில் வகுப்புநேரத்தில் நடைபெறும்.
- அரையாண்டுத்தேர்வுகள் 12,13.12.2025ம் திகதிகளில் நடைபெறும்.
19.12.2025ம் திகதி வெள்ளிக்கிழமை 18:45 மணிக்கு நத்தார் விழா நடைபெறும். அனைத்துலக ஆண்டிறுதித் தேர்வுத்தாள் பொதிகள் 22.09.2025 ம் திகதி யேர்மனுக்கு கிடைத்ததாகவும் 22.10.25 ம் திகதி திருத்தப்பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது. வெகுவிரைவில் பெறுபேறுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
- பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் 30 .11.2025 ம் திகதி 15:00 மணிக்கு நடைபெறும். இதுவரை தவணைக்கட்டணங்கள் அங்கத்தவர் கட்டணங்களைச் செலுத்தாதவர்கள் 15.11.2025ம் திகதிக்கிடையில் செலுத்தி முழு அங்கத்தவர் உரிமையை பெற்றுக்கொள்ளவும்.
- தைப்பொங்கல்விழா 17.01.2026 சனிக்கிழமை நடைபெறும். கோலாட்டம் நிகழ்வில் பங்குபெற விரும்பும் 4,5ம் வகுப்பு மாணவர்களும் இன்னியம் நிகழ்வில் பங்குபெற விரும்பும் பாடசாலையில் அல்லது வெளியில் கலைப்பாடம் கற்கும் மாணவர்களும் தங்கள் பெயர்களை வகுப்பாசிரியரிடம் அல்லது நிருவாகத்தினரிடம் கொடுக்கவும்.
- பொங்கல்விழாவில் நடைபெறும் அறிவுமுற்றம் நிகழ்விற்கான தெரிவுப்போட்டி 6,7,8,9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு வெகுவிரைவில் நடைபெறும். மாணவர்களைத் தயார்ப்படுத்தவும்.
பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 46- 2025