13.11.26 வெள்ளிக்கிழமையும் , 14.11.26 சனிக்கிழமையும் வழமை போல் பாடசாலை நடைபெறும் .
- கலை
- கலை வகுப்புகள் வழமைபோல் நடைபெறும் .
- இவ்வாரம் மாவீரர் ஓவியப்போட்டி 13.11.26 வெள்ளி,14.11.26 சனி ஆகிய இரு நாள்களும் தொடக்கநிலை – ஆண்டு 12 வரையுள்ள வகுப்புகளுக்கு வகுப்பு நேரத்தில் நடைபெறும். ஓவியம் வரைவதற்கான தாள்கள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டு வருதல் வேண்டும் . வரையப்போகும் ஓவியம் பற்றிய தகவல்கள் மாணவர்களுக்கு எற்கனவே கொடுத்து விடப்பட்டுள்ளது . வரையப்போகும் ஓவியத்தை வீட்டில் வரைந்து பயிற்சி செய்து கொள்ளலாம். பயிற்சி செய்த தாள்கள் வகுப்பறைக்கு கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.
- 15.11.26 ஞாயிற்றுக்கிழமை அன்னை தமிழ்முற்றம் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறும்.
இடம் - தமிழர் வள ஆலோசனை மையம்
நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது

- 21.11.26 சனிக்கிழமை – 27.11.26 வெள்ளிக்கிழமை வரை மாவீரர் வாரம்.
- மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு பாடசாலையில் 20.11.26 வெள்ளியும் ,21.11.26 சனியும் நடைபெறும்.
- 27.11.26 மாவீரர் நாள் பாடசாலை நடைபெறமாட்டாது.
- அரையாண்டுத்தேர்வு 11.12.26 வெள்ளி, 12.12.26 சனி
- நத்தார் ஆராதனை 19.12.26 சனிக்கிழமை
- இதுவரை பணவரவுத்தாள் (faktura) பெற்றவர்கள் கட்டணங்களைச் செலுத்தும்படி வேண்டுகின்றோம்.
- இந்த தவணைக்கான faktura ( August-desember)விரைவில் அனுப்பப்படும் என்ற தகவலை அறியத்தருகின்றோம் . இதைப்பற்றிய ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன் அல்லது அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
தொலைபேசி எண். 004755707045. நன்றி!
12.11.2026 நிருவாகம் - றொம்மன் வளாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.