றொம்மன்

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள் கிழமை எண். 45 – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

  

  • கல்வி 

06.11.26 வெள்ளிக்கிழமையும்  , 07.11.26  சனிக்கிழமையும்  வழமை போல் பாடசாலை நடைபெறும் . 

  • கலை 

கலை வகுப்புகள் வழமைபோல் நடைபெறும் .  

 

  • இவ்வாரம் மாவீரர் ஓவியப்போட்டி 06.11.26 வெள்ளி 07.11.26  சனி ஆகிய இரு நாள்களும்  வகுப்பு நேரத்தில் நடைபெறும் . ஓவியம் வரைவதற்கான தாள்கள்  தவிர்த்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டு வருதல் வேண்டும் . வரையப்போகும் ஓவியம் பற்றிய தகவல்கள் மாணவர்களுக்கு எற்கனவே  கொடுத்து விடப்பட்டுள்ளது . வரையப்போகும்  ஓவியத்தை வீட்டில் வரைந்து பயிற்சி செய்து கொள்ளலாம். பயிற்சி செய்த தாள்கள் வகுப்பறைக்கு கொண்டுவர அனுமதிக்கப்பட மாட்டாது.  
  • எமது வளாகத்தின் 35 வது கல்வியியற் போட்டிகளில் திருக்குறள் போட்டி 07.11.2026 சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும். திருக்குறள் போட்டிக்கான  தாள்கள்  மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை போட்டியில் பங்குபற்ற ஊக்குவிக்கவும். போட்டிக்குப் பதிவதற்குத் தவறியவர்கள் நேரடியாக வந்து பங்குபற்றலாம். 
  • 08.11.26  ஞாயிற்றுக்கிழமை அன்னை மாணவர்களின் கலைமாலை நிகழ்வும் , நிலாமுற்றம் நிகழ்வும்  இடம்பெறும். 

        இடம் – Frogner kultursenter   நேரம் – 14.30 மணி  

 

  • 15.11.26 ஞாயிற்றுக்கிழமை அன்னை தமிழ்முற்றம் திருக்குறள் போட்டிகள் நடைபெறும். 

          இடம் - தமிழர் வள ஆலோசனை மையம்  

 

  •  21.11.26  சனிக்கிழமை – 27.11.26 வெள்ளிக்கிழமை வரை  மாவீரர் வாரம்.  
  • மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு பாடசாலையில் 20.11.26 வெள்ளியும் ,21.11.26 சனியும்  நடைபெறும்.  
  • 27.11.26  மாவீரர் நாள்  பாடசாலை நடைபெறமாட்டாது. 
  • நிதி 
  • இதுவரை பணவரவுத்தாள் (faktura) பெற்றவர்கள் கட்டணங்களைச் செலுத்தும்படி வேண்டுகின்றோம்.  
  • இந்த தவணைக்கான  faktura ( August-desember)விரைவில்  அனுப்பப்படும்   என்ற தகவலை அறியத்தருகின்றோம் . இதைப்பற்றிய ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன்  அல்லது  அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.  

தொலைபேசி எண். 004755707045. நன்றி! 

05.11.2026 நிருவாகம் - றொம்மன் வளாகம் 

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.