றொம்மன்

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள் கிழமை எண். 44 – 2026

அறிவித்தல்
வளாகம் முகப்பு

 

  • கல்வி

30.10.26 வெள்ளிக்கிழமையும, 31.10.26  சனிக்கிழமையும்  வழமை போல் பாடசாலை நடைபெறும் .

  • கலை

கலை வகுப்புகள் வழமைபோல் நடைபெறும் .

  • இவ்வாரம் நிலாமுற்றம் போட்டிக்கு 3,5,7,9,11 ம் வகுப்புகளில் இருந்து  ஐவர்  தெரிவு செய்யப்படுவர் . (ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் )
  • புதிய பாடநூலுக்கான பயிற்சி நூல்கள் ( 5-11) வந்துவிட்டது.

 

இதுவரை  பயிற்சி நூல்களை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குரிய  பயிற்சி நூல்களை  பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர்  உரிய நேரத்தில் 3ம் மாடியில் பெற்றுக்கொள்ளலாம் .

 

எமது வளாகத்தின் 35 வது கல்வியியற் போட்டிகளில் திருக்குறள் போட்டி 11.2026 சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும். திருக்குறள் போட்டிக்கான தாள்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை போட்டியில் பங்குபற்ற ஊக்குவிக்கவும்.

 

  • திருக்குறள் போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் தங்கள் பதிவுகளை தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி 10.26 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். பதிவதற்கான link வகுப்புக் குழுக்களில் போடப்பட்டுள்ளது.

         08.11.26 ஞாயிற்றுக்கிழமை அன்னை மாணவர்களின் கலைமாலை நிகழ்வும் , நிலாமுற்றம் நிகழ்வும் இடம்பெறும்.

இடம் – Frogner kultursenter   நேரம் – 14.30 மணி

 

  • 15.11.26 ஞாயிற்றுக்கிழமை அன்னை தமிழ்முற்றம் திருக்குறள் போட்டிகள் நடைபெறும்.

        இடம் - தமிழர் வள ஆலோசனை மையம் 

  • மாவீரர் ஓவியப்போட்டி 06.11.26 வெள்ளிக்கிழமையும் , 07.11.26 சனிக்கிழமையும் பாடசாலையில் வகுப்பு நேரத்தில் நடைபெறும்.
  • 21.11.26 சனிக்கிழமை – 27.11.26 வெள்ளிக்கிழமை வரை  மாவீரர் வாரம்.
  • மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு பாடசாலையில் 11.26 வெள்ளியும் ,21.11.26 சனியும் நடைபெறும்.
  • 27.11.26 மாவீரர் நாள் பாடசாலை நடைபெறமாட்டாது.

  • நிதி
  • இதுவரை பணவரவுத்தாள் (faktura) பெற்றவர்கள் கட்டணங்களைச் செலுத்தும்படி வேண்டுகின்றோம்.
  • இந்த தவணைக்கான faktura ( August-desember)விரைவில் அனுப்பப்படும்   என்ற தகவலை அறியத்தருகின்றோம் . இதைப்பற்றிய ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன்  அல்லது  அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

தொலைபேசி எண். 004755707045. நன்றி!

29.10.2026 நிருவாகம் - றொம்மன்