09.10.26 வெள்ளிக்கிழமையும் , 10.10.26 சனிக்கிழமையும் வழமை போல் பாடசாலை நடைபெறும் .
இவ்வாரத்தில் இருந்து சில வகுப்பறைகள் மாற்றப்பட்டுள்ளன என்பதை அறியத் தருகின்றோம்.
வகுப்பு நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது .

கலை
- வகுப்புகள் வழமையான நேரத்தில் நடைபெறும். மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
- வாணிவிழா (நவராத்திரி விழா )20.10.2026 செவ்வாய்க்கிழமை 17.30 மணிக்கு நடைபெறும் . 5ம், 6 ம் வகுப்புப் பெற்றோர்கள் நிருவாகத்தினருடன் இணைந்து இவ் விழாவினைச் செய்வர் .
- நவராத்திரி விழாவுக்கான 5 ம், 6ம் வகுப்புப் பெற்றோருக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை பெற்றோருக்கு 16.10.26 வெள்ளி 17.45 மணிக்கும்,
சனிக்கிழமை பெற்றோருக்கு 10.10.26 சனி 09.45 மணிக்கும் நடைபெறும் . அனைவரும் தவறாது கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பாக
நடாத்தி முடிப்பதற்கு உதவி செய்யவும்.
- எமது வளாகத்தின் 35 வது கல்வியியற் போட்டிகளில் திருக்குறள் மனனப்போட்டி 10.2026 சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும். திருக்குறள் மனனப்போட்டிக்கான தாள்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை போட்டியில் பங்குபற்ற ஊக்குவிக்கவும்.
- திருக்குறள் மனனப்போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் தங்கள் பதிவுகளை தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி 10.26 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். பதிவதற்கான link வகுப்புக் குழுக்களில் போடப்பட்டுள்ளது.
- அடுத்தவாரம் (வாரம் 42)பெற்றோர் தகவற்கூட்டம் வெள்ளியும் ,சனியும் நடைபெறும் .
- 10.26 வெள்ளிக்கிழமை பெற்றோருக்கு 17.45 மணிக்கும் , 17.10.26 சனிக்கிழமை பெற்றோருக்கு 09.45 மணிக்கும் நடைபெறும்.
- சிற்றுண்டிச்சாலை வழமைபோல் 3ம் மாடியில் இயங்கும் .
இதுவரை பணவரவுத்தாள் (faktura) பெற்றவர்கள் கட்டணங்களைச் செலுத்தும்படி வேண்டுகின்றோம். ஏற்கனவே செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும். விவரம் தேவைப்படின் எம்மைத்தொடர்புகொள்ளவும். ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன் அல்லது அலுவலகத்தில் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
தொலைபேசி எண். 004755707045. நன்றி!
08.10.2026 நிருவாகம் - றொம்மன் வளாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.