றொம்மன்

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 41 – 2025 .

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம் அன்பார்ந்த பெற்றோர்களே!

  • இலையுதிர்கால விடுமுறையை இன்பமாக கழித்திருப்பீர்களென நம்புகின்றோம்.
  • மழலையர் முற்றம் நிகழ்வு இவ்வாரம் 11.10.25 சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும்.
  • ஆண்டுக்கூட்டம் 26.10.2025  மணி 15:00 கூட்டம் நடைபெறவுள்ளது.
  • கல்வியியற் போட்டிகளில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 18.10.2025ம் திகதி  சனிக்கிழமை 13.00 மணிக்கு நடைபெறும்.
  • தேசியஅறிவாடல்போட்டியில் கலந்துகொள்ளும் 3-12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவாடல்போட்டி  26.10.2025ம் திகதி  நடைபெறும்.
  • அன்னை முற்ற திருக்குறள் மனனப்போட்டி 25.10.2025ம்  திகதிகளில் நடைபெறும்.

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 41

நிதி: தவணைக்கட்டணங்களை இதுவரை செலுத்தாதவர்களுக்கு இன்று குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எம்மால் வழங்கப்பட்ட தவணைக்கட்டணங்களை  (2023, 2024, 2025 ஆண்டுக்குரிய) இதுவரை செலுத்தாதவர்கள் உடனடியாக  15.10.2025ம் திகதிக்கிடையில் செலுத்தவும்.

குறிப்பு:

1.அங்கத்துவ கட்டணம் ,தவணைக்கட்டணம் முழுமையாகச் செலுத்தியவர்கள், (15.10.25ம் திகதிக்கு முன்னர் செலுத்தியிருத்தல் வேண்டும்.)

2  வளாகச் செயற்பாடுகளில் தொடர்சியாக பங்குகொள்பவர்களே

முழுமையான அங்கத்துவத்துவ உரிமையினை உறுதிப்படுத்தியவர்கள் என்பதனை அறியத்தருகின்றோம்.

ஆண்டுக்கூட்டம்:

ஆண்டுக்கூட்டத்தினை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 26.10.2025  மணி 15:00 கூட்டம் நடைபெறும்.

பெற்றோர் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் இணைந்து கலந்துரையாடப்பட்டது. பெற்றோர் பிரதிநிதிகளால் தரப்பட்ட ஆலோசனைகளுக்கு ஏற்ப ஆண்டுக்கூட்ட நடைமுறை விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. காவல் பணி, கூட்ட நடத்துனர் தொடர்பான விடயங்கள் உறுதிப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.

ஆண்டுக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களை றொம்மன் நிருவாகத்தின் rommen(at)annai.no மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். அவ்வாறு அனுப்பப்படும் விடயங்கள் யாப்புவிதிகளுக்கு ஏற்ப பரிசீலனை செய்யப்பட்டு ஆண்டுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்படும்.

 

தெரிவுக்குழு 2025

புதிய நிருவாக அங்கத்தவர்களை நிருவாகத்திற்கு உள்வாங்கவுள்ளோம். இதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தெரிவுக்குழுதொடர்புகளுக்கு valgkomite.rommen@annai.no

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது ஐயப்பாடுகள் இருப்பின் வளாகப்பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

தொலைபேசி இல. 90104881, 41381568

நன்றி!

 

நிர்வாகம் - றொம்மன் வளாகம்

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்.