அங்கத்தவர்கள், அங்கத்தவர்களின் பெற்றோர்கள்/பாதுகாவலர்களுக்கு வணக்கம்.
தங்களுடன் மிக நெருங்கிய உறவினைப் பேணுவதற்காகவும், தங்களுடனான தொடர்பாடலை மிகவும் எளிதாக்கவும் இவ்வாரம் முதல் வாராந்தத் தகவல் என்ற ஒரு புதிய தகவற் பரிமாற்ற வழிமுறையை நடைமுறைப் படுத்துகின்றோம். இதனால் வளாகத்தில் ஒவ்வொரு கிழமையும் என்னென்ன செயற்பாடுகள் நடைபெறுகின்றதென்பதனையும், அடுத்த கிழமை என்;ன செயற்பாடுகள் நடைபெறவுள்ளது என்பதனையும், ஏற்கனவே வளாகத்தினால் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளையும் தங்களுக்கு உடனுக்குடன் அறியத்தர மிகவும் எளிதாக அமையும் எனவும் நம்புகின்றோம். இதில் வழங்கப்படும் விடயங்களில் ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின், நேரடியாக வளாகப் பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு தெளிவடைந்து கொள்ளலாம். நன்றி.
இணைப்பைப் பார்க்கவும்:
பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 11 – 2025
08.03.25 ம் திகதி சனிக்கிழமை 13:00 மணிக்கு கதை சொல்லும் போட்டி, பேச்சுப்போட்டி
என்பன 2 ம்மாடியில் இரண்டு மண்டபங்களில் நடைபெறும். போட்டிகள் நிறைவடைந்ததும் இப்போட்டிகளுக்கான பரிசளிப்புகளும், நடைபெற்று முடிந்த ஓவியப்போட்டி, சொல்வதெழுதுதற் போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
அத்துடன் எதிர்வரும் 15.03.25 சனியன்று மதியம் 13.00 மணிக்கு தேசிய மட்டத்திலான பேச்சுப்போட்டிகள் 1-7 ம் வகுப்புகளுக்கு நடைபெறும்.
பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி என்பவற்றில் வளாகங்களில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள் தேசியமட்டத்தில் இடம்பெறும் இறுதிப்போட்டிகளில் பங்குகொள்வர்.
தேசிய மட்டத்தில் நடைபெறும் அன்னை தமிழ்முற்றப் போட்டிகளில் பேச்சுப்போட்டி 15.03.25 ம்திகதி 13:30 மணிக்கு நடைபெறும்.
சிறுவர் கதை சொல்லும் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி என்பன 23.03.25 ஞாயிற்றுக்கிழமை 11:00 மணிக்கு நடைபெறும்.