பேர்கன்

பொங்கல் விழா

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்புடையீர், எதிர்வரும் வருடம் 2023 பொங்கல் விழாவில் ஆண்டு 6-7, ஆண்டு 8 - 9, ஆண்டு 10 என மூன்று பிரிவுகளாக வளாகங்களுக்கிடையேயான அறிவு முற்றப் போட்டிகள் இடம்பெறவுள்ளது அறிந்ததே. அறிவு முற்றம் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பிக்க உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

அறிவு முற்றம் போட்டிகளை திறம்பட நடாத்திட திறமைமிக்க தொகுப்பாளர்களை உங்கள் வளாகங்களில் இருந்து தெரிவு செய்து, எம்மோடு தொடர்பை ஏற்படுத்தித் தருவீர்கள் என நம்புகிறோம்.

மேடை நிகழ்வுகளில் தொகுத்து வழங்கக்கூடிய இளவயது ஆண் / பெண் என இருபாலரும் வரவேற்கப்படுகின்றனர். குறிப்பாக சரளமாக பேசும் ஆற்றல் கொண்ட இளம் ஆசிரியர்கள் நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

மேலும், அறிவு முற்றம் நிகழ்ச்சித் தொகுப்பு செய்யக் கூடியவர்களை(இளைய ஆசிரியர்களை) அடையாளம் கண்டு அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் என்பவற்றை எதிர்வரும் 25.12.22 ற்கு முன்பாக எமக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.