லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 22 – 2025 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 31.05.2025 Ukasinfo 22-2025

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த சனி மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

31.05.2025 சனிக்கிழமை சிற்றுண்டிச் சாலை பத்தாம் வகுப்பு மாணவர்கள் தலைமையில் நடைபெறும்.

15.06.2025 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுப்போட்டி விளையாட்டு விழாவாக கொண்டாடப்படும்.

கல்வி

வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.

மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.

ஆண்டிறுதித் தேர்வுகள் 2025 விவரம் :
எழுத்துத் தேர்வுகள்:
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஆண்டிறுதித் தேர்வு 07.06.2025 சனி நடைபெறும்.

எதிர்வரும் 07.06.2025 அன்று அனைத்துலக தேர்வு பரீட்சை நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அன்றையதினம் பெந்தெகொஸ்தே விடுமுறை இருப்பதால், எத்தனை மாணவர்கள் பரீட்சை எழுத வருவார்கள் என்பதை கீழே உள்ள இணைப்பு ஊடாக எமக்கு அறியத்தரவும். எதிர்வரும் 29.05.2025 அன்றுவரை மீளவும் விண்ணப்படிவ திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக ஆண்டிறுதி பரீட்சை 07.06.2025


விளையாட்டு போட்டி 2025
விளையாட்டு போட்டி பயிற்சிகள் (1-10ஆம் வகுப்பு):
ஞாயிற்றுக்கிழமை 01.06.2025 நேரம்: 15:30 – 17:00 (Lillestrøm stadion, Leiraveien 2, 2000 Lillestrøm)

அன்பார்ந்த பெற்றோர்களே! உங்களில் யாராவது மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தால் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிரிவுகள். ஒருவர் ஆகக்கூடியது மூன்று தனி விளையாட்டுக்களில் பங்குபற்றலாம்.


விளையாட்டுகளைப் பதிவுசெய்வதற்கான முடிவுத்திகதி: 02.06.2025
PÅMELDING TIL LEKER (Frist 02.06.2025)

நிதி 2025
Vår 2025 தவணை கட்டணத்தை விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்தி செல்லவும்.
அத்துடன், 2025 கான அன்னை அங்கத்தவர் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது – தயவுசெய்து அதையும் விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
31.05.2025 10ம் வகுப்பு மாணவர்களின் தேநீர்ச்சாலை
07.06.2025 அனைத்துலகத் தமிழ் எழுத்துத்தேர்வு
14.06.2025 பாடசாலை கடைசி நாள்
15.06.2025 விளையாட்டு விழா

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்

Ukasinfo_22-2025 pdf