வணக்கம்!
ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்
வாராந்தத் தகவல் 17.05.2025 Ukasinfo 20-2025
கல்வி
எதிர்வரும் 17.05.2025 சனிக்கிழமை எமது வாழிட நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்னை லோறன்ஸ்கூக் வளாகம் 17.05.2025 அன்று விடுமுறை ஆக அறிவிக்கின்றது.
அத்தோடு வழமை போல் நடைபெறும் மேல் அதிக கற்கைநெறி வகுப்புகள் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற மாட்டாது.
ஆண்டிறுதித் தேர்வுகள் 2025 விவரம் :
எழுத்துத் தேர்வுகள்:
அன்னை பூபதி தமிழ்க் கலைகூடத்தின் ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு 24.05.2025 சனி நடைபெறும்.
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஆண்டிறுதித் தேர்வு 07.06.2025 சனி நடைபெறும்.
எதிர்வரும் 07.06.2025 அன்று அனைத்துலக தேர்வு பரீட்சை நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அன்றையதினம் பெந்தெகொஸ்தே விடுமுறை இருப்பதால், எத்தனை மாணவர்கள் பரீட்சை எழுத வருவார்கள் என்பதை கீழே உள்ள இணைப்பு ஊடாக எமக்கு அறியத்தரவும்.
அனைத்துலக ஆண்டிறுதி பரீட்சை 07.06.2025
விளையாட்டு போட்டி 2025
இவ்வருட விளையாட்டுப் போட்டியில் உங்கள் பிள்ளைகள் இணைந்து கொள்வதற்கான அங்கத்துவப் பணம் 50 குறோணர்களை TBUK விற்கு 19.05.2025 முன் செலுத்தி பதிவு செய்து கொள்ளும் வண்ணம் பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.
இதற்கான இணைப்பு கீழே உள்ளது.TBUK கட்டணவிபரங்கள் - https://medlemskap.nif.no/202173
நிதி 2025
Vår 2025 தவணை கட்டணத்தை விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்தி செல்லவும்.
அத்துடன், 2025 கான அன்னை அங்கத்தவர் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது – தயவுசெய்து அதையும் விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
24.05.2025 நோர்வேயில் ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு & தமிழின அழிப்பு 16ம் ஆண்டு நினைவு நாள்
31.05.2025 10ம் வகுப்பு மாணவர்களின் தேநீர்ச்சாலை
07.06.2025 அனைத்துலகத் தமிழ் எழுத்துத்தேர்வு
14.06.2025 கோடைகால ஒன்று கூடல் / பாடசாலை கடைசி நாள்
15.06.2025 விளையாட்டுப் போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_20-2025 pdf