லோறன்ன்ஸ்கூக் வளாகம்

Ukentlig informasjon uke 18 – 2025 – med lydopptak

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்!

ஒலிவடிவம் – வாராந்தத் தகவல்

வாராந்தத் தகவல் 03.05.2025 Ukasinfo 18-2025

03.05.2025 சித்திரை விழா / Eventyr dagen

சித்திரை விழா ஓசன் பாடசாலையின் மேற்கட்டிடத்தில் உள்ள கீழ் மண்டபத்தில் நடைபெற இருப்பதால் இட பற்றாக்குறை மற்றும் பாதுகாப்புக் கருதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே மண்டபத்தினுள் நேரடி நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவர். பெற்றோருக்காக பிரத்தியேகமாக மேல் மண்டபத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பாக திரையில் காண்பிக்கப்படும். புரிந்துணர்வுக்கு நன்றி.

நிகழ்ச்சி நிரல் பின்பு அனுப்பி வைக்கப்படும்.

மதிப்புக்குரிய பெற்றோர்களுக்கு ஒரு பணிவான அறிவித்தல்.
எதிர்வரும் 03.05.2025 சனிக்கிழமை சித்திரை விழாவை முன்னிட்டு தேநீர்ச்சாலை பெற்றோருக்காக அலுவலகம் அமைந்துள்ள கீழ்க் கட்டிடத்தில் இயங்கு நிலையில் இருக்கும்.

சித்திரை விழா நிகழ்வின் இடைவேளை நேரமாகிய 30 நிமிடங்கள் மட்டும் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக பெற்றோர்கள் பாவிக்கும் இடத்தை ( மேற்கட்டிடத்தின் மேல் மண்டபத்தை ) அதற்காக ஒதுக்க வேண்டி இருப்பதால் அந்த இடத்தை அவ்வேளை மட்டும் பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுகின்றோம்.
புரிதலுக்கு நன்றி.

கல்வி
பாடசாலை வழமை போல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும். சித்திரை விழா நிகழ்ச்சிகள் 10.00 ஆரம்பமாகும்.

மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் நடைபெற மாட்டாது.

ஆண்டிறுதித் தேர்வுகள் 2025 விவரம் :
புலன்மொழித்தேர்வுகள்:
அனைத்துலக தமிழர் மேம்பாட்டுப்பேரவை 10.05.2025 சனி நடைபெறும்.
எழுத்துத் தேர்வுகள்:
அன்னை பூபதி தமிழ்க் கலைகூடத்தின் ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு 24.05.2025 சனி நடைபெறும்.
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஆண்டிறுதித் தேர்வு 07.06.2025 சனி நடைபெறும்.
கலைவகுப்புகள்
கலை வகுப்புகள் நடைபெற மாட்டாது.

விளையாட்டு போட்டி 2025
இவ்வருட விளையாட்டுப் போட்டியில் உங்கள் பிள்ளைகள் இணைந்து கொள்வதற்கான அங்கத்துவப் பணம் 50 குறோணர்களை TBUK விற்கு விரைவாக செலுத்தி பதிவு செய்து கொள்ளும் வண்ணம் பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.
இதற்கான இணைப்பு கீழே உள்ளது.TBUK கட்டணவிபரங்கள் - https://medlemskap.nif.no/202173

நிதி 2025
Vår 2025 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no தொலைபேசி 908 89 393

செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
03.05.2025 சித்திரை விழா / Eventyr dagen
10.05.2025 அனைத்துலக ஆண்டிறுதிப்புலன் மொழித் தேர்வு
07.06.2025 அனைத்துலகத் தமிழ் எழுத்துத்தேர்வு

குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.

தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!

நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_18-2025.pdf