வணக்கம்!
வாராந்தத் தகவல் 15.03.2025 Ukasinfo 11-2025
வருடாந்தப்பொதுக்கூட்டம் 2025
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம். நேரம்: 09:45-12:00 (இ. வே.10:45-11:15)
ஆண்டுக்கூட்டம் 2025 இற்கான நிகழ்ச்சிநிரல்.
குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே!
கல்வி
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
மேலதிக தமிழ் கற்கை நெறி வகுப்புகள் வெள்ளிகிழமைகளில் 18:00 – 19:00 மணி வரை நடைபெறும்.
15.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் தேசிய மட்டத்திலான பேச்சுப் போட்டிகள்
கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
தமிழரின் கலை பண்பாடுகளை சிறுவயது முதல் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்குடன் மழலைகள் மற்றும் சிறுவர் நிலை மாணவர்களுக்கான இலவச கலை வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இந்த வகுப்புகள் நேரம் 12 மணிக்கு ஆரம்பமாகி 12: 45 மணி வரை நடைபெறும்.
கலை வகுப்புகள் நடைபெறும் இடங்கள் :
சங்கீதம் மழலை வகுப்பு அறையில் நடைபெறும்.
பரதநாட்டியம் சிறுவர் வகுப்பு அறையில் நடைபெறும்.
Free style கீழ் மாடியில் gym மண்டபத்தில் நடைபெறும்.
நிதி 2024
Høst 2024 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no தொலைபேசி 908 89 393
செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
15.03.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறன்ஸ்கூக் வளாகம்
15.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் பேச்சுப் போட்டிகள்
23.03.2025 அன்னைத் தமிழ் முற்றப் கதை மற்றும் திருக்குறள் போட்டிகள்
03.05.2025 சித்திரை விழா / Eventyr dagen
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_11-2025 pdf