வணக்கம்!
வாராந்தத் தகவல் 21.12.2024 Ukasinfo 51-2024
எல்லோருக்கும் இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்!
தவணை 2 ஆரம்பம் 11.01.2025
கல்வி
21.12.2024 தவணை இறுதி நாள் , தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும்
வழமையான நேரத்தில் வழமைபோல் நடைபெறும்.
பொங்கல் விழாவில் நடைபெற இருக்கும் Khoot போட்டி நிகழ்ச்சிக்கான தெரிவு பின்வரும் வகுப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெறும். 6-7 வகுப்பு, 8-9 வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு.
கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
நிதி 2024
Høst 2024 தவணை கட்டணங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. தயவுசெய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்துங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால்,
எங்களை தொடர்புகொள்ளுங்கள்:
மின்னஞ்சல் faktura.lorenskog@annai.no
தொலைபேசி 908 89 393
2024 ஆவணி மாதம் அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்ட அங்கத்துவபணம் பலர் செலுத்தவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது, செலுத்தாத அனைவருக்கும் KID மற்றும் கணக்கு எண் விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் விரைவில் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
செலுத்தியவர்கள் இத்தகவலை விலத்திச்செல்லவும்.
18.01.2025 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
பொங்கல் விழாவுக்கான பயிற்சிகள் வெள்ளி மாலை ஆரம்பிக்கப் படும்.
2ம் மற்றும் 3ம் வகுப்பு மாணவர்கள் பெண்கள் கும்மி நடனம் வெள்ளிக் கிழமை, நேரம் 18.00 மணி
நெறியாழ்கை மேரி ஆசிரியர்.
2ம் மற்றும் 3ம் வகுப்புமாணவர்கள் ஒயிலாட்டம்ஆண்கள் வெள்ளிக் கிழமை, நேரம் 19.00 மணி
நெறியாழ்கை மேரி ஆசிரியர்.
6ம் மற்றும் 7ம் வகுப்புமாணவர்கள் ஆண்கள் காவடி நடனம் வெள்ளிக் கிழமை, நேரம் 18.00 மணி
நெறியாழ்கை பாஸ்கரன் மாஸ்டர்
பொங்கல் விழாவுக்கான பயிற்சிகள் சனிக்கிழமை பாடசாலை இடைவேளைக்கு பிறகு ஆரம்பிக்கப் படும். நெறியாழ்கை, கலை ஆசிரியர், பாஸ்கரன் மற்றும் மேரி ஆசிரியர்
ஆண்டுக்கூட்டம் 2025 - 15.02.2025 சனிக்கிழமை
இடம் : ஓசன் பாடசாலை மேல்க் கட்டிடம். நேரம்: 09:45-12:00 (இ.வே.10:45-11:15)
ஆண்டுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் சார்பாக ஏதாவது விடையங்கள் கொண்டுவரவிரும்பின் எமக்கு 12.01.2025 இற்கு முன்னதாக மின்னஞ்சலினூடாக lorenskog.annai@gmail.com அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். வழங்கப்பட்ட நாளுக்கு முன்னதாக எமக்குக் கிடைக்கப்படும் விடையங்கள் மட்டுமே ஆண்டுக்கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் முழுமை பெற்ற அங்கத்தவராக இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிநிரல் பின்பு அனுப்பிவைக்கப்படும்.
குறிப்பு:
ஆண்டுக்கூட்டத்திலே அனைவரும் பங்கேற்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் தகைமைக்கு உரித்தானவர்கள் முழுமை பெற்ற அங்கத்தவர்கள் மட்டுமே!
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளவும். இதில் ஏதும் ஜயப்பாடு இருப்பின் நிதிப் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
2025 ஆண்டுக்கூட்டத்தில் இடம்பெறவிருக்கும் தெரிவுகள்.
-2025-2027 இற்கான நிர்வாகம்
-நிர்வாகத் தெரிவுக்குழு
-கணக்காய்வாளர்
-விளையாட்டுப் போட்டிக்கான குழு
-விளையாட்டுப் போட்டிக்கான இல்லப்பொறுப்பாளர்கள்
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
18.01.2025 அன்னை தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
15.02.2025 வருடாந்தப்பொதுக்கூட்டம் லோறஸ்கூக் வளாகம்
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்