வணக்கம்!
வாராந்தத் தகவல் 19.10.2024 Ukasinfo 42-2024
நவராத்திரி விழாவை முன்னிட்டு 19.10.2024 கல்வி மற்றும் கலை வகுப்புகள் நடைபெறமாட்டாது.
எதிர்வரும் 19.10.2024 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென் மண்டபத்தில் அன்னை லோறன்ஸ்கூக் வளாகத்தின் நவராத்திரி விழா அதற்கான அழைப்பையும் குழுக்களூடாக ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
உங்கள் பிள்ளைகளின் நிகழ்வுக்கான பயிற்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. பிள்ளைகளை ஊக்குவித்து அவர்கள் பழகும் பயிற்சிகளுக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. எமது வளாகத்தின் செயற்பாடுகள் மற்றும் இப்படியான நிகழ்வுகள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற அனைத்து பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
அன்பான பெற்றோர்களே!
விழாவுக்கு முன்னும்,பின்னும் நிறைய வேலைகள் உள்ளன. அத்தேவைகளை உணர்ந்து பெற்றோர்குழு, தேநீர்ச்சாலை குழுவினரோடு இணைந்து ஒற்றுமையோடு செயற்பட வேண்டி நிற்கின்றோம்.
நவராத்திரி விழா நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமையே பலம், தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_42-2024 pdf