வணக்கம்!
வாராந்தத் தகவல் 28.09.2024 Ukasinfo 39-2024
கல்வி, சனிக்கிழமை கற்பித்தல் நேரம் 09.30-12.30 வரையும்
14.09.2024 சனிக்கிழமையில் இருந்து நவராத்திரி விழா நிகழ்வு நோக்கிய கலை (valfag) நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
நவராத்திரி விழா நிகழ்வு நோக்கிய கலை (valfag)
5 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களில் விரும்பமுடையவர்கள் தேர்வுசெய்யும் கலைகளும் அதற்கான பயிற்சிகளும் 13.15 மணிவரை நடைபெறும். இதுவரை படிவத்தை பதியாமல் உள்ள 6, 7, 8 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுப்பாடமாக உள்ள ஒரு கலை நிகழ்சியில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.
வழமைபோல தொடக்கநிலை, மழலையர், சிறுவர் நிலை வகுப்புகள் 12.00 மணி வரையும்.
1வகுப்பு தொடக்கம் 4 வகுப்பு வரை 12.30 மணி வரையும் இவ்வகுப்புகளின் கலை நிகழ்வு நோக்கிய கலைப் பயிற்சிகள் நடைபெறும் வேளையில் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மாற்றங்கள் இருப்பின் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த புகைப்பட கண்காட்சி
தமிழ் இளையோர் அமைப்பினர் நடாத்தும் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த புகைப்பட கண்காட்சி.
எதிர்வரும் 28.09.2024 சனிக்கிழமை 11.20 மணிக்கு ஓசன் பாடசாலை மேற் கட்டட கீழ்மாடி மண்டபத்தில் 5-11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது.
வகுப்பறைச் சந்திப்புகளுக்கான நேரவிபரம்.
28.09.2024 முதல் வரை அனைத்து வகுப்புகளுக்குமான வகுப்பறை சந்திப்பு மட்டும் இடம்பெறும். அந்தந்த வகுப்புக்குரிய பெற்றோர்கள் அவசியம் வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
1ம் வகுப்பு அ - 28.09.2024 நேரம் 12:30 மணி
கலைவகுப்புகள்
வழமைபோல் நடைபெறும், மாற்றங்கள் இருப்பின் கலை ஆசிரியர்கள் தங்களுக்கு நேரடியாக அறிவிப்பார்கள்.
நிதி 2024
2024 ஆவணி மாதம் அன்னை தலைமை நிர்வாகத்தால் அறவிடப்பட்ட அங்கத்துவபணம் பலர் செலுத்தவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது, செலுத்தாதவர்கள் விரைவில் செலுத்தும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் கட்டணங்கள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள அங்கத்தவர்கள் கவனத்திற்கு! விரைவாக அக்கட்டணங்களை செலுத்தும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம். கட்டணம் தொடர்பாக உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கணக்காளரிடம் அல்லது பொறுப்பாளரிடம் 21.09.2024 சனிக்கிழமைக்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்.
அப்படி தொடர்பு கொள்ளத்தவறின் நாங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளோம் என்பதை மனவருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.
எமது வளாக இக்கல்வியாண்டில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்
19.10.2024 நவராத்திரி விழா
20.10.2024 அனைத்துலக மட்டத்திலான அறிவாடல் இறுதி போட்டி
குறிப்பு: சூழ்நிலைக்கேற்ப வரும் மாற்றங்களுக்கு எம்மை புரிந்துணர் வோடு தயார்நிலைப்படுத்துவோம்.
தமிழை வளர்க்கப் பணிபுரிவோம்!
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்
Ukasinfo_39-2024 (pdf)