தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு! / For studenter som tar tamil som valgfag!
உயர்நிலைப் பள்ளிகளில் (நிலை 1, நிலை 2 மற்றும் நிலை 3)/(Videregående: Nivå 1, Nivå 2 og Nivå 3) -தமிழ்மொழியை தேர்வுப்பாடமாக எடுக்க விரும்பும் மாணவர்கள், அதற்கான பதிவுகளை 15/09/2024 க்குள் தங்கள் நோர்வீயியன் பள்ளி மூலமாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ செய்யலாம்.
இப்பதிவுகள் 15.09 க்குள் செய்து முடிக்கப்பட வேண்டும், மேலும் பதிவுகளை மேற்கொள்வதற்கு சொந்த அடையாள கடவுச்சொல் (Min ID) வேண்டும். சில பள்ளிகள் இதற்கான வழிமுறைகளை அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளன, எனவே பள்ளி வழங்கிய நாள்கள் மற்றும் செய்திகளைப் பின்பற்றுவது முகமை (அவசியம்).
தனி ஆளாகப்பதிவு செய்பவர்களும் 15.09 க்குள் இணையவழியில் சென்று பதிவுகளை மேற்கொள்ளலாம். உயர்நிலைப் பள்ளியில் தமிழ்மொழியைத் தேர்வுப்பாடமாக பாடமாகப் படிக்கும் மாணவர்களும் மற்றும் 8, 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களும் இத்தேர்வை எடுக்கலாம்.
எனவே, தமிழ் மொழித் தேர்வுக்கு அணியமாக இருக்கும் மாணவர்களுக்கு -அதற்கான வகுப்புக்களை தமிழர் வள ஆலோசனை மையத்தினர்(TRVS) ஐப்பசி மாதத்தில் தொடங்கவுள்ளார்கள் என்பதனை இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்!.